மத்திய பிரதேச மாநில தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து, 10 நோயாளிகள் பலி…

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம்  ஜபல்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் திடீரென தீ பிடித்து, மற்ற வார்டுகளுக்கு பரவியது. இந்த விபத்தின் காரணமாக,  தீவிர சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து தீ விபத்தில் சிக்கி … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி

சென்னை; மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இத்தாலி அணிக்கி எதிரான போட்டியில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.  வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ் 34-வது நகர்த்தலில் இத்தாலி வீரரை வீழ்த்தி வெற்றி அடைந்துள்ளார்.

நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் காவல்: மும்பை நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை: நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றமும் நடைபெற்றது என்று அமலாக்கத்துறையினரின் வழக்கில் சஞ்சய் ராவத் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். மஹாரஷ்டிராவின் புரேகா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புகளை சீரமைப்பு செய்ததில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது என்பது குற்றச்சாட்டு. சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் முன்னாள் … Read more

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 95 கிலோ கஞ்சா மூட்டைகள் – மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தனுஷ்கோடி அருகே கடலில் மிதந்து வந்த 23 லட்சம் மதிப்பிலான 95 கிலோ கஞ்சா மூட்டைகளை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கொடிமரம் பாடு என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த 95 கிலோ எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மரைன் போலீசார், கரை ஒதுங்கி கிடந்த 95 கிலோ கஞ்சா … Read more

ம.பி: ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்!

தாயின் சடலத்தை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள கோடாரு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். செவிலியர்களின் அலட்சியத்தால் தனது தாய் உயிரிழந்ததாக, அவரது மகன் சுந்தர் குற்றம்சாட்டினார். இதையடுத்து தாயின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனியார் ஆம்புலன்ஸிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் … Read more

ஹீரோ ’ராஜராஜன்’! ஆனாலும் மாஸ் இவர்தான்! மனம் கவர்ந்த வந்தியத்தேவனின் வரலாற்று பக்கம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு சோழப் பேரரசில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி எழுதிய கற்பனை நாவலான “பொன்னியின் செல்வனில்” வரும் பல கதாபாத்திரங்கள் நம்மில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். வீரம் செறிந்த ஆதித்த கரிகாலன் பாத்திரம் சிலருக்கு பிடிக்கும். சோழப் பேரரசை ஆண்ட மன்னன் என்பதால் அருள்மொழிவர்மனை சிலருக்கு பிடிக்கும். நயவஞ்சகத்தில் தன்னிகரில்லாத கற்பனை கதாபாத்திரமான நந்தினியை சிலருக்கு பிடிக்கும். அறிவுக் கூர்மையால் அரசாட்சியை தீர்மானித்த குந்தவையையும் சிலருக்கு பிடிக்கும். பரிசுத்தமான ஒரு தலைக் காதலை … Read more

விசாகப்பட்டிணத்தில் தடையில்லாத படப்பிடிப்பில் 'வாரிசு'

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று(ஆக.,1) முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக … Read more

சஞ்செய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

மும்பை, குடிசை சீரமைப்பு திட்ட நில மோசடியில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நள்ளிரவில் அவரை கைது செய்தது. இதையடுத்து, இன்று மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்செய் ராவத்தை அமலாக்கத்துறை ஆஜர் செய்தது. சஞ்செய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற நீதிமன்றம், சஞ்செய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து … Read more

காமன்வெல்த் 2022 : லான் பவுல்ஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது இந்திய அணி

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் காமன்வெல்த் … Read more

உக்ரைன் துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிய கப்பல்கள் புறப்பட தயார் – துருக்கி அறிவிப்பு

கீவ், உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக ஜீலை 22-ந் தேதி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் … Read more