கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையில் இருந்தும், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய மூவரும் பெண்கள் தனி கிளைச்சிறையிலும் இருந்து ஜாமினில் வெளிவந்தனர்.  கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரைக்கும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் … Read more

கொச்சி, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை.

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் கொச்சி, கோட்டயம் போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோட்டயத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவிலும், கர்நாடகாவிலும் மழைக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Source link

கர்நாடகா இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தலாம்! உயர்நீதி மன்றம் அனுமதி…

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை திட்டமிட்டபடி நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மைதானம் கார்ப்பரேஷனின் சொத்து என்பதால், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தலாம் என தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அரசிடம் அனுமதி கோரி வழக்கு தொடரப் பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உள்ளாட்சி அமைப்பு செவ்வாய்கிழமை அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு … Read more

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்..!!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும், உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படைக்கப்பட்டுள்ளது.

முழு பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு மைக்ரோசாஃப்டில் வேலை

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த முழு பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மென்பொறியாளர் யஷ் சோன்கியாவுக்கு ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் மைக்ரோசாஃப்டில் வேலை வழங்கப்பட்டுள்ளது. திரைவாசிப்பு மென்பொருள் உதவியுடன் தன்னுடைய கல்வியை பெற்றதாகவும், இலக்கை சாதிக்க உடலில் உள்ள குறைபாடுகள் தடையில்லை என யஷ் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?

ஜெயலலிதா மரண விசாரணை முடிவடைந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கான செலவுகள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சை எழுந்த நிலையில், மரணம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கூறி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல்நிலை எப்படி இருந்தது? என்பதில் தொடங்கி, விரிவான விசாரணையை 154 பேரிடமும் நடத்தியது ஆறுமுகசாமி தலைமையிலான … Read more

”பேரரசை இழந்த தலைவர்” சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசோவ்!

International oi-Yogeshwaran Moorthi மாஸ்கோ: சோவியத் யூனியன் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் இன்று காலமானார். இவரது வாழ்க்கை மற்றும் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவுகளும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் பார்க்கலாம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானது சோவியத் யூனியன். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றிய கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் இருந்தது. அதன் … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி: மத்திய அரசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், ‘கேன்சலேஷன்’ கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டி.,யும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரயில் போக்குவரத்தை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏழைகளின் ஏரோபிளேன் என கருதப்படும் இப்போக்குவரத்தை தான் தொலைதூர பயணம் செய்யும் மக்களின் முதல் தேர்வு. அந்த ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள மத்திய அரசு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

வடக்கு அயர்லாந்தில் கேரள சிறுவர்கள் பலி| Dinamalar

லண்டன் : வடக்கு அயர்லாந்தில், ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி கேரளாவை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.ஐரோப்பிய நாடான வடக்கு அயர்லாந்தில் வசித்த, இந்திய வம்சாவளியான கேரளாவை சேர்ந்த ஜோசப் செபாஸ்டியான்,16, ரியூவன் சிமோன்,16, ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு ஏரியில் குளித்தனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். லண்டன் : வடக்கு … Read more