மைனா படத்தை மிஸ் செய்த பிரபல நடிகருக்கு பப்ளிக் டாய்லட்டில் வேலை செய்யும் ரோல்… காரணம் விநோதமானது

சென்னை: கழுகு திரைப்படம் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் கிருஷ்ணா. தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன், யட்சன், மாறி 2 போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில் மைனா திரைப்படம் தனக்கு வந்த கதை என்று கூறி அதில் ஏன் தான் நடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். மைனா மைனா திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர் பிரபு சாலமன் ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் அர்ஜுன், விக்ரம் … Read more

இதை செய்யாட்டி வங்கி கணக்கு முடங்கலாம்.. PNB வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1க்குள் இதை செய்திடுங்க!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களது வங்கிக் கணக்கு இருக்கா? அப்படின்னா? செப்டம்பர் 1-க்குள் உங்களது கே ஒய் சி அப்டேஷனை செய்ய வேண்டும். இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அப்டேட் செய்துள்ளது. அதில் KYC பற்றிய முக்கிய அறிவிப்பு இது தான். அதில் ரிசர்வ் வங்கியின் கே ஒய் சி அப்டேஷன் கடந்த மார்ச் 2022க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பலரும் செய்யாதிருந்த … Read more

மீண்டும் கொரோனா:உயிழப்பவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து காணப்படுகிறது. நாளாந்தம் 150 இற்கும் 200 இற்கும் இடைப்பட்ட தொற்றாளர்கள் பதிவாகின்றனர். உயிழப்பவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தீராத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர். எதுவித தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களும் உயிரிழக்கின்றனர். எனவே கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் மிக … Read more

துணை முதலமைச்சர் வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!!

மதுபான உரிம முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மணீஷ் சிசோடியா கணக்கு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, சிபிஐ அதிகாரிகள் 5 பேர் சென்றனர். அவர்களுடன் சிசோடியாவும், அவரது மனைவியும் சென்றனர். இதையடுத்து சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, தமது லாக்கரில் கணக்கில் வராத எந்த … Read more

வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான்!!

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் வங்கதேசத்தை சுருட்டிவிட்டனர். ஆப்கன் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜீப் இணைந்து ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்தனர். இதனால் 89 ரன்கள் எடுப்பதற்குள் வங்க தேசம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசிநேரத்தில் ஆல் ரவுண்டர் மொசாடெக் ஹொசைன் … Read more

Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்… எது நார்மல், எது அப்நார்மல்?

பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது? நித்யா ராமச்சந்திரன் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்…. ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும். periods blood அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக … Read more

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்து காயம்.!

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன் தவறி கீழே விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் தடம் எண் 19 பேருந்தில், ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை பின்னால் வந்த வாகன ஓட்டி வீடியோ பதிவு செய்த நிலையில், திடீரென பேருந்தில் இருந்து ஒரு மாணவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் … Read more

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆக.31, செப்.1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான … Read more

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 64 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்தவரும் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவருமான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடர்பாக அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் … Read more

வழக்கறிஞர்களுக்கு சமூக அக்கறை அவசியம்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

வழக்கறிஞராக பனியாற்றி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல, சமூகத்தில் மக்கள் மதிப்பும், சமூக அக்கறையும் கொண்டு இருக்க வேண்டும் நேர்மையும், கடின உழைப்பும் உங்கள் வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்குமென சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாக கலை அரங்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக புதிதாக பதிவு செய்தவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி சிறப்பு … Read more