பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி!

பாஜக அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்திருப்பதாகவும், அதன் பொருள் இந்திய நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது என கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  பாஜக சோதனை என்ற பெயரில் விசாரனை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் அவிழ்த்து விடுகிறார்கள் என்றும் … Read more

மும்பையில் பிரபலமான 14 அடி உயர லால்பாக்-சா-ராஜா விநாயகரை வழிபட திரண்ட பக்தர்கள்!

மும்பையில் லால்பாக்-சா-ராஜா என்று அழைக்கப்படும் 14 அடி உயர விநாயகர் சிலையை பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டதால் விநாயக சதுர்த்தி விழா மீண்டும் உற்சாகத்துடன் களை கட்டியுள்ளது. 2 ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை நகர மக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதுடன் இனிப்புகளையும் படையலிட்டு வருகின்றனர். மும்பையின் கணேஷ் மண்டல் லால்பாக்-சா-ராஜா பிரம்மாண்டமான விநாயகரை வழிபட ஏராளமானோர் வருகின்றனர். 1934 முதல் மிகப்பழைய கணபதி சிலையாகவும் மிகப் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியைகள் ஜாமினில் விடுவிப்பு

சேலம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், மூவரும் சேலம் தனி கிளைச்சிறையில் இருந்து வெளிவந்தனர்.

வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் ராஞ்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கைது

ஜார்கண்ட்: வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் ராஞ்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டனர். பழங்குடியின பணிபெண்ணை வீட்டில் 6 ஆண்டுகளாக சிறை வைத்து தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் சீமா பத்ரா மீது புகார் அளிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி: ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம் என விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் என்றும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

திருச்சி: தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து… துண்டானது இளைஞரின் கால்

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையிலிருந்து தென்காசி சென்ற ஆம்னி பேருந்து (சக்தி டிராவல்ஸ்) திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சக்தி என்ற இளைஞருக்கு கால் துண்டானது. அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து … Read more

புதுவையில் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு| Dinamalar

புதுச்சேரி: ‘விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் தனியார் பங்களிப்புடன்திறக்கப்படும்’ என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் நேற்று பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நிர்வாகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்கிறது. அதனை களைந்து, புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் அனைத்தையும் … Read more

Cobra Review: மண்டையை போட்டுக் குழப்பும் கணக்கு வாத்தியார்.. கோப்ரா விமர்சனம் இதோ!

Rating: 3.5/5 நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ இசை: ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம்: அஜய் ஞானமுத்து சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகி உள்ள படம் கோப்ரா. சிட்டிசன், தசாவதாரம், தூம் 2 உள்ளிட்ட பல படங்களில் நாயகர்கள் வித்தியாசமான … Read more

இடைக்கால பட்ஜெட் இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தாக்கல் செய்தார்.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்த … Read more

பொது மக்களின் விசாரணைகளுக்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அரச ஊழியர்களுக்கு சுற்றறிக்கை

பொது மக்களிடமிருந்து அரச நிறுவனங்களுக்கு வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்கள் சமர்ப்பிக்கும் கடிதங்கள்இ மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு இந்த சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து அனுப்பும் கடிதங்கள் … Read more