ஆசிய கைப்பந்து: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

சென்னை, 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி பக்ரைனில் உள்ள ரிப்பா நகரில் நடந்தது. 17 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஈரான் 25-12, 25-19, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதனால் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இந்திய அணியின் கேப்டன் துஷயந்த் சிங் … Read more

அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை

ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவிந்தர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போர்ட் வொர்த் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அதுபற்றி விசாரிப்பதற்காக ரவிந்தர் சிங் அங்கு சென்றார். புல் தரையில் கிடந்த அந்த பெண் நலமாக இருக்கிராறா என்பதை சோதிக்க ரவிந்தர் சிங் அந்த பெண்ணின் அருகில் … Read more

கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.150 ஆக உயர்த்த கோரிக்கை

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை கொள்முதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில், “வெளிமார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை உயரும் வகையில் தமிழக அரசு செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் செய்ய ஒரு மாத காலம் தான் அவகாசம் உள்ளது.இதனால், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யாமல் கடந்த காலங்களைப் போல் அனைத்து முக்கியமான கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், … Read more

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் கல்விக் கட்டணம் குறைப்பு: பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியீடு

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவருக்கான கல்விச்செலவை அரசே வழங்கும். அதன்படி, ஆண்டுதோறும்அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு2 தவணையாக அரசு வழங்குகிறது. … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு, சிந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோரை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் கனமழையால் பாகிஸ்தானின் சிந்து, பலூசிஸ்தான் மாகாணங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், லட்சக் கணக்கான … Read more

சீன நிறுவனங்களின் ரூ.12 ஆயிரத்துக்கு குறைவான ஸ்மார்ட் போன்களுக்கு தடை இல்லை – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

சீன நிறுவனங்கள் தயாரிக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செல்போன் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் செல்போன் விற்பனையை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் எதுவும் அரசிடம் கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை அதிகரிக்குமாறு சில சீன மொபைல் … Read more

குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தென்மண்டல ஐஜிக்கு ஐகோர்ட் பாராட்டு

மதுரை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட போலீசாருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் போலீசார் என் மீது 2018ல் வழக்கு பதிந்தனர். இதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மனு தள்ளுபடியானது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை கேட்டபோது, அதுபோல் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என … Read more

சீன கடன் ஆப்களை தடை செய்யுங்கள்; ஒன்றிய அரசுக்கு காங். கோரிக்கை

புதுடெல்லி: சீன கடன் ஆப்களை தடை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான விசாரணையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் 1100 டிஜிட்டல் கடன் ஆப்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 600 ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுவதை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை 52 பேர் இதுபோன்ற இந்த கடன் ஆப்கள் மூலமாக மிரட்டல்களால் … Read more

விராட் கோலியின் பயோபிக்: விஜய் தேவரகொண்டா ஆசை

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து திரைக்கு வந்துள்ள லைகர் படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக குறைவான வசூலையே ஈட்டி வருகிறது. கடந்த 25ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடி வசூலை கூட நெருங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக நேரில் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரிடத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர், எந்த … Read more

டிசம்பரில் துவங்கும் தளபதி 67.. படத்தில் இணையும் புதிய கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்கலாமா!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் சூட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. … Read more