சிறுத்தை பீதியால் அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு

கொப்பல்: கொப்பல் மாவட்டம் கங்காவதி டவுன் அருகே அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அஞ்சனாத்திரி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுத்தை அந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிவதாக வந்த தகவலை அடுத்து கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி … Read more

இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்

புதுடெல்லி, 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் (17 வயதுக்குட்பட்டோர்) உலக கோப்பை கால்பந்து போட்டி புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) பெண்கள் நடுவர்கள் கமிட்டி தலைவர் காரி செய்ட்ஸ் அறிவித்துள்ளார். போட்டியின் போது நடுவர்கள் அளிக்கும் முடிவில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், ஆட்டத்தின் … Read more

பாகிஸ்தானில் மீட்புப் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலியான பரிதாபம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர … Read more

ரூ.1500 கோடி முதலீடு செய்யும் ஓபராய் குரூப்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஹோட்டல் தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் தற்போது லாபத்தை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஒபராய் குழுமம் ரூ.1500 கோடி புதிய முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஒபராய் ஹோட்டல் குழுமம் ஆந்திர மாநிலத்தில் ரூ.1500 கோடி புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் அதற்காக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி … Read more

எல்லாம் பொடிப் பொடியாக்கும்…! எடப்பாடி பழனிசாமி விடுத்த செய்தி.!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  விடுத்துள்ள “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி : “ஞான முதல்வனாம், வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் … Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த காட்டு யானை.. ஆற்றங்கரையோரம் விரட்டி அடித்த வனத்துறையினர்..!

அசாமில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நேற்றிரவு வழிதவறி சன்மாரி பகுதிக்குள் புகுந்த காட்டு யானையைக் கொண்டு மக்கள் பீதியடைந்த நிலையில், அந்த யானை ஒரு வீட்டுக்குள் சென்று உணவு தேடியுள்ளது. பின்னர் பேருந்து நிலையத்துக்குள் சென்ற காட்டு யானை அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை, பிரம்மபுத்திரா ஆற்றங்கரையோரம் விரட்டினர். … Read more

மக்கள் மருந்தகம் மூலம் கடந்த ஆண்டில் பொதுமக்களின் பணம் ரூ.5,000 கோடி அளவுக்கு சேமிப்பு

சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள 8,700 மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 … Read more

ஜார்க்கண்ட் | வீட்டு சிறை; இரும்பு கம்பியால் தாக்குதல் – 8 வருடமாக பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் நீக்கம்

ராஞ்சி: வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு வருடமாக சித்ரவதை செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தான் தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்றா பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பி கொண்டு தாக்கி சுனிதாவின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் … Read more

தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்: திமுக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக்கூடாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு அதைத் … Read more

இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதி மொத்தமும்… சுற்றுச்சூழல் செயலாண்மை வெளியிட்ட அறிவிப்பு

இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்தாலும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை நிரப்ப போதுமானதாக இல்லை  பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40°C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது தென்மேற்கு இங்கிலாந்து முழுவதும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதாக சுற்றுச்சூழல் செயலாண்மை அறிவித்துள்ளது. ஏறக்குறைய 90 ஆண்டுகளில் இல்லாத வறண்ட கால நிலைகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இந்த கோடையில் பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40°C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. @getty … Read more