இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக வேலையின்மை.. எங்கு மிக குறைவு.. தமிழகத்தின் நிலை?

டெல்லி: சர்வதேச நாடுகளில் மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து நடத்திய ஒரு ஆய்வில் , வேலையின்மையே பெரிய பிரச்சனையாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு 1 கோடி பேர் தங்களது வேலையினை இழந்து தவித்து வந்தனர். எனினும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ள பொருளாதாரத்தினால், இது படிப்படியாக குறைந்து வந்தாலும், தொடர்ந்து சில மாநிலங்களில் வேலையின்மை விகிதம் என்பது இன்றும் மோசமான நிலையே இருந்து வருகின்றது.

வேலையின்மை விகிதம் சரிவு.. NSO சொன்ன குட் நியூஸ்..!

நகர்புறங்களில் வேலையின்மை அதிகம்

நகர்புறங்களில் வேலையின்மை அதிகம்

இந்தியாவில் சமீபத்திய மாதங்களாக வேலையின்மை விகிதமானது குறைவதாக தோன்றினாலும், நகர்புறங்களில் இன்றளவும் அதிகளவிலேயே இருந்து வருகின்றது. எனினும் கிராமப்புறங்களில் சற்றே வேலையின்மை விகிதமானது குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தொழில் துறை மற்றும் சேவைத் துறையில் வேலையின்மை விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சேவையில் அதிகரிக்கும் வேலையின்மை

சேவையில் அதிகரிக்கும் வேலையின்மை

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சேவைத் துறையில், வேலையின்மை விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஏற்கனவே பல டெக் ஜாம்பவான்கள் தங்களது புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன. இது இனி வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யவும் தயாரான நிலையே இருந்து வருகின்றன.

 எந்த மாநிலத்தில் அதிகம்?
 

எந்த மாநிலத்தில் அதிகம்?

சிஎம்ஐஇ (CMIE) தரவின் படி, ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் மாநில வாரியாக எங்கு அதிகம்:

ஹரியானா – 37.3%

ஜம்மு & காஷ்மீர் – 32.8%

ராஜஸ்தான் – 31.4%

ஜார்கண்ட் – 17.3%

திரிபுரா – 16.3%

டெல்லி – 8.2%

பஞ்சாப் – 7.4%

மேற்கு வங்கம் – 7.4%

ஹிமாச்சல பிரதேசம் – 7.3%

தமிழ் நாடு – 7.2%

தெலுங்கானா – 6.9%

கேரளா – 6.1%

ஆந்திர பிரதேசம் – 6%

 

எங்கு குறைவு?

எங்கு குறைவு?

CMIE தரவின் படி, ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் மாநில வாரியாக எங்கு குறைவு:

சட்டீஸ்கர் – 0.4%

மேகாலயா – 2.0

மகாராஷ்டிரா – 2.2%

ஓடிசா – 2.6%

கர்நாடகா – 3.5%

உத்தரபிரதேசம் – 3.9%

புதுச்சேரி – 5.2%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which state in India has the highest unemployment rate? Where is it lowest?

Which state in India has the highest unemployment rate? Where is it lowest?/இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக வேலையின்மை.. எங்கு மிக குறைவு.. தமிழகத்தின் நிலை?

Story first published: Friday, September 23, 2022, 11:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.