சூடானது சூடானது யுத்தம் – பொன்னியின் செல்வனின் புதிய லிரிக் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. 

 

இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதால் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மே அல்லது ஜூனில் வெளியாகுமென்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.

 

இந்நிலையில் இப்படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்தின் இசையை தரமாக அமைத்திருப்பதாகவும் நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து பகிர்ந்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.