காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம்: குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகள் செல்ல பூம்புகார் நிர்வாகம் தடை விதித்தது. கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு  உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

ஓணம் பண்டிகையையொட்டி பழனி- கொடைக்கானல் சாலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் அனுமதி

திண்டுக்கல்: பழனி- கொடைக்கானல் சாலை மழைக்கு சேதமடைந்த நிலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் விசாகன் அனுமதியளித்தார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள பயணிகள் சாலையை அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தியாவில் ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா… 27 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 5,379 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக குறைந்தது. * புதிதாக 27 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

`பாரத ஒற்றுமை பாதயாத்திரை’: குமரியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்த ராகுல்!

பாரத ஒற்றுமை பாதயாத்திரைக்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சென்னை வந்தடைந்திருக்கிறார். விமான நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கவும், காங்கிரஸ் தொண்டர்களிடையே கட்சியை பலப்படுத்தவும் பாரத ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை பாத யாத்திரையை தொடங்குகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு ஆதரவு திரட்டவுள்ளார். இதற்காக சென்னை வந்தடைந்த ராகுல் காந்திக்கு சிறப்பான … Read more

`அச்சோ, உனக்கு பசிக்குத்தா?!’- குட்டியானை பசியை போக்க குழந்தைகள் செய்த க்யூட்டான விஷயம்!

கர்நாடகாவின் சம்ராஜநகர் மாவட்டத்தில், தாயை பிரிந்து தவித்த வந்த குட்டியானையை அங்குள்ள பள்ளி குழந்தைகள் வாஞ்சையுடன் கவனித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிலிகிரிரங்கனா என்ற மலைப்பகுதியிலிருந்து வழி மாறி தாயை விட்டு பிரிந்த குட்டி ஆண் யானையொன்று, அருகிலிருந்த புரனிபாடி என்ற கிராமத்துக்குள் நேற்று நுழைந்துள்ளது. அங்கிருந்த பள்ளியொன்றுக்கு அருகே மிகவும் பசியுடனும் சோர்வுடனும் சென்று சேர்ந்திருக்கிறது. இதைக்கண்ட அப்பள்ளி குழந்தைகள், குட்டி யானைக்கு தங்களிடமிருந்த பழங்களும், பாலும் சாப்பிட கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட பிறகு … Read more

இட ஒதுக்கீடு வழக்குவரும் 13 முதல் விசாரணை| Dinamalar

புதுடில்லி, ‘கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான முழுமையான விசாரணை வரும் 13 முதல் துவங்கும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2019 ஜனவரியில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் … Read more

கனடாவில் தொடர் கத்திக் குத்து: கொலையாளி உடல் மீட்பு| Dinamalar

கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் … Read more

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.. கமலின் கர்ஜனை குரலில்..பொன்னியின் செல்வன் டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை : அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த விழவில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் ஐஷ்வர்யாராய், த்ரிஷா, ஐஷ்வர்யலெட்சுமி என ஏராளமானோர் கலந்து கொண்டார். இந்த விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.பொன்னியின் செல்வன் படத்தில் தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள டிரைலர் எப்படி இருக்குனு … Read more

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை இரண்டாம் நாள் ஐபிஓவில் காலையிலேயே முழுமையாக முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இரண்டாம் நாள் முடிவில் தகுதியான முதலீட்டு நிறுவனங்கள் 0.98 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 1.27 மடங்கும், ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 3.61 மடங்கும் என மொத்தமாக 1.53 மடங்காகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை வாங்கியுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமாக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே … Read more

 Tamil news today live: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார் ராகுல் காந்தி

Go to Live Updates பெட்ரோல்- டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாறும்பெறும் திருவிழாவாக மாறிய இசை வெளியீடு விழா பொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ரஜினி, கமல் என்று முன்னனி நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் … Read more