சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் எஸ்.முரளிதர்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. கொலீஜியம் என்பது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே ஆகும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், உயர் … Read more

Russia – Ukraine War: உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பதா..? – ரஷ்யாவுக்கு ஐ.நா கண்டனம்!

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, உக்ரைனில் … Read more

Twitter செயலியில் புதிய ஆப்ஷன்! ட்வீட் Edit வசதி!

உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் ட்விட்டர் வலைத்தளமும் ஒன்று. இந்த ட்விய்ட்டர் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்த்படு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக உள்ளது. தற்போது இதில் புதிய வசதியாக Edit செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. இதனால் ஒருவழியாக பயன்பாட்டாளர்கள் அவர்களின் டிவீட்களை இனி எடிட் செய்துகொள்ளலாம். இந்த வசதி முதலில் Twitter Blue பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்துகொள்ளலாம். இந்த Twitter Blue என்பது வெளிநாடுகளில் … Read more

பொன்னியின் செல்வன் பார்த்துட்டீங்களா… அப்ப இந்த காமெடி சீரிஸையும் பாருங்க!

நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ்.பி.பி. சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியானது. இதனை மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாலாஜி மோகனின் தயாரித்துள்ளார். நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், இன்று (செப். … Read more

கோடநாடு வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம் – சைலேந்திரபாபு அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017, ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்த கும்பல், இந்த சம்பவத்தின்போது காவலாளியாக இருந்த ஓம் பகதூரை கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜெம்சீர் அலி, சந்தோஷ் சாமி … Read more

பொன்னியின் செல்வன் விமர்சனம்: 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு – திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்?

வானில் தோன்றும் தூமகேது சோழ குல வேந்தர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது என்பதைச் சொல்கிறது பொன்னியின் செல்வனின் முதல் பாகம். கடம்பூர் மாளிகையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருக்கிறது என்பதனை அறிந்துகொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவனை அங்கு அனுப்பி, அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தையிடமும், தமக்கையிடமும் சொல்லப் பணிக்கிறான். சோழ தேசத்தின் சதிகாரர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கிறான் வந்தியத்தேவன். அவனுக்குப் பல ரூபங்களில் உதவிகள் ஒரு … Read more

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது, பல்கலைக்கழக  துணை வேந்தர் கீதாலட்சுமி  தரவரிசை பட்டியலை வெளியிட்டார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 அரசுக் கல்லுரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. வேளாண்மை பல்கலை மற்றும்  உறுப்பு கல்லுரிகளில் 2,148 இடங்களும், இணைப்புக்கல்லுரிகளில் 2,337 இடங்களும் உள்ளன. இந்த கல்லுரிகளில் 12 இளநிலை பட்டப்படிப்புகளுக்கனா விண்ணப்பங்கள்,  கடந்த ஜுன் மாதம் முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு … Read more

புழல் சிறையில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை

புழல்: புழல் மத்திய சிறையில் இன்று நன்னடத்தை பேரில் 5 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்ட முக்கிய சிறைகளில் நன்னடத்தை பேரில் சிறைக் கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்பேரில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை நன்னடத்தை … Read more

கோமுகி நதி அணையிலிருந்து 27 நாட்களுக்கு பழைய, புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 01.10.2022 முதல் 27 நாட்களுக்கு பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம்: டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம் என கார் சீட்டின் பின்புறத்தில் Uber டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த Uber India, பயணிகள் தங்களுக்குத் தெரியாத நபர்களை எப்படி அழைக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால் App-ல் உள்ள ஓட்டுனரின் பெயரை உபயோகித்துக் கொள்ளுங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.