“சிறைகளில் தன்பாலின ஈர்ப்பு வன்கொடுமைகள் அதிகம் நடப்பது கவலையளிக்கிறது!" – உச்ச நீதிமன்றம்
சிறைச்சாலைகளில் தன்பாலின ஈர்ப்பும், தன்பாலின வன்கொடுமைகளும் அதிக அளவில் நடப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். கே.எம்.பீமா கோரேகான் வழக்கில் சிறையிலிருக்கும் கவுதம் நவ்லகா என்பவரை உடனடியாக மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றுமாறு தலோஜா சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நவ்லகா `மீண்டும் சிறைக்கு அனுப்பாமல், சிறையிலிருந்து வெளியே செல்ல வேண்டும்’ எனவும், அதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கான காரணமாக சிறையில் … Read more