புதிய செல்போன்கள் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்றும் நோக்கில் செயல்படுகிறோம்: முதல்வர் ஸ்டாலின் 

செங்கல்பட்டு: “தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனைமாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: ” உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பினை அளிக்கும் திட்டங்களையும் கொண்டுவர தமிழக அரசு … Read more

டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் மனு: ஆர்.எஸ்.எஸ்ஸும் நாங்களும் ஒண்ணா? என்ன நியாயம்?

சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்தத்தோடு சமூக நல்லிணக்கப் பேரணிக்கும் அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அக்டோபர் 02 – காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை … Read more

அடுத்த காங்கிரஸ் தலைவர்: காந்தி குடும்பத்தின் ஆதரவு இவருக்கு தானாம்!

137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி, 3 ஆண்டுகளாக தலைவர் யார்? என்று மாறி மாறி கேட்டு கொண்டு சலிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நேரு குடும்பம் மட்டுமே தலைவர் பதவிக்கான நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், ராகுல் காந்தி வைத்த முற்றுப்புள்ளி புதியவரை தேடும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதற்கான போட்டியில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி நேரம் வரை பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் அசோக் கெலாட் பெயர் … Read more

பொன்னியின் செல்வன் – சோழ தேசம் சென்ற பார்த்திபன் பெருமித பேச்சு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் இதனை படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு … Read more

பொன்னியின் செல்வன் வரலாற்று உண்மையா இல்லை கற்பனையா? – ஒரு பார்வை

பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுவதை அடுத்து, பல்வேறு மக்கள் இதற்காகவே பொன்னியின் செல்வன் புதினத்தை ஆர்வத்தோடு வாங்கி படித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் புதினத்தில் எந்தளவிற்கு வரலாற்று உண்மைகள் இருக்கின்றன? எந்தெந்த கதாப்பாத்திரங்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் என்று பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்துக்கொள்கிறார். குடவாயில் பாலசுப்ரமணியன் தமிழகத்திலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசு சோழப் பேரரசு தான். சோழப் பேரரசை சங்க காலப் பேரரசு, … Read more

12ம்வகுப்பில் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம்! அமைச்சர் பொன்முடி…

சென்னை: துணைத்தேர்வு எழுதி 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் என உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும்,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்திருக்க வேண்டிய தில்லை என்று தெரிவித்தார். ‘சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என விளக்கம் கொடுத்ததுடன், 12- ஆம் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாண … Read more

‘அச்ச, அம்மே ’ வாசகங்களோடு நெல்லை அருகே கேரள தொடர்புடைய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் கேரள தொடர்புடைய பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பாளையங்கோட்டை  அருகே 480 ஆண்டுகளுக்கு முற்பட்ட முன்னீர்பள்ளம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக முன்னீர்பள்ளம் கேரள மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் ஆட்சியின் கீழ் இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் பாளை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் … Read more

கும்பகோணம் ரயில் நிலையத்தை சிறப்பு சீரமைக்க முடிவு: ரயில்வே வாரியம்

தஞ்சாவூர்; கும்பகோணம் ரயில் நிலையத்தை சிறப்பு சீரமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸில் பிடிபட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை: போலீஸ் விசாரணை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது. உளவு தகவல் அடிப்படையில், சூரத்தில் காம்ரிச் நகர் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அகமதாபாத் – மும்பை சாலையில் நோயாளியின்றி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிகள் முழுவதுமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1290 இரண்டாயிரம் ரூபாய் … Read more

“துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் ஆர்எஸ்எஸ்! அவர்களும் நாங்களும் ஒன்றா?”- திருமாவளவன்

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள்” என சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல கமிஷன் தலைவராக இருந்த b.p.மண்டலுக்கு அங்கு உள்ள ஓ.பி.சி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலை வைத்தனர். சிலையை நிறுவும் முன்பே அதை ஆந்திர அரசு தகர்த்து … Read more