Month: September 2022
தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும்
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இன்றும் அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more
இனி வெள்ளத்தில் மிதக்காது.. சென்னை மேயர் கியாரண்டி..!
“கடந்த ஆண்டு சென்னையின் எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என, மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் … Read more
சென்னை: போதைத் தகராறில் நடந்த கொலை! – நெல்லை பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வீரனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (39). இவர் கடந்த 25.10.2015-ம் ஆண்டு சென்னை, காரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அதே பாருக்கு வந்த இன்னொரு கும்பலுக்கும் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உருட்டுக்கட்டையால் தாக்கி பாண்டியன் கொலைசெய்யப்பட்டார். இது குறித்து டாஸ்மார்க் மேற்பார்வையாளர் சிவா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். உதயகுமார் விசாரணையில் … Read more
சென்னையில் சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்: இதுவரை ரூ.650 கோடி வசூல்
சென்னை: சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் … Read more
குளிர்காலமாக இருந்தாலும் சரி, எரிவாயுவை சேமியுங்கள்! ஜேர்மானியர்களுக்கு வலியுறுத்தல்
குளிர் காலநிலை இருந்தபோதிலும் அதிக எரிவாயுவை சேமிக்குமாறு ஜேர்மன் அரசங்கள் நுகர்வோரை வலியுறுத்துகிறது. உக்ரைனில் போரினால் ஏற்பட்ட கொந்தளிப்புகளுக்கு மத்தியில் எரிசக்தியைச் சேமிக்குமாறு ஜேர்மன் அரசாங்கம் நுகர்வோருக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மனியின் உயர்மட்ட எரிசக்தி கட்டுப்பாட்டாளர் (Bundesnetzagentur) வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில், குளிர் காலநிலையைப் பொருட்படுத்தாமல் அதிக எரிவாயுவைச் சேமிக்குமாறு நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்தது. எரிவாயு பயன்பாத்தில் கட்டுப்பாடுகள் குறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், நாட்டின் புள்ளிவிவரங்கள் சராசரிக்கும் அதிகமான பயன்பாட்டைக் … Read more
30/09/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா பாதிப்பு… 5,096 பேர் டிஸ்சார்ஜ்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றுகாலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 3,947 பேர் … Read more
கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை!: பூர்வாங்க பணிகள் தொடக்கம்.. விமர்சியாக நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா..!!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலை தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக … Read more
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகினார் திக்விஜய் சிங்
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து திக்விஜய் சிங் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.
காந்திநகர் – மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் இன்று பயணம் செய்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.