“விலையேற்றம்தான் திமுக-வின் `ஆட்சி' மாடல்!" – சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி காட்டம்

மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சிவகாசியில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். இதில், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், கழக உறுப்பினர்கள் உட்பட பல கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “தி.மு.க ஆட்சிக்கு … Read more

போர்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான … Read more

கட்சி மேலிட விருப்பம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நிமிட வரவாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் நேற்றிரவு கார்கேவிடம் அவரே கட்சியின் விருப்பமான தெரிவாக இருப்பதாக எடுத்துரைத்து மனுத்தாக்கல் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மும்முனைப் போட்டியா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் … Read more

PS1 Review: ’சோழனுக்கு எப்போதும் தோல்வியே இல்லை’ பொன்னியின் செல்வனை கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் புகழ்பெற்ற படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இன்று படமாக வெளிவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சோழர் சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகாலை ரிலீஸான இந்தப் படத்துக்கு பாசிடிவ் விமர்சனைங்களையே கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். முதல் பாகத்தின் முதல் பாதி மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால், இரண்டாம் பாகம் புல்லரிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more

சென்னை உள்பட 8 முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை  உள்பட 8 முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவிழா காலங்களில், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளை வழியனுப்பவும், ஊருக்கு வருபவர்களே வரவேற்கவும், சொந்தபந்தங்கள் ரயில் நிலையங்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருவிழாக் காலங்களில்  ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில்,  பிளாட்பாரம் டிக்கெட் … Read more

லட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல்

வாஷிங்டன்: லட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தது 7 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இந்த மசோதாவில்  வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்: சசிதரூர் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.

வேலூர்: கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட இருந்த ரூ.10 கோடி பறிமுதல் – 4 பேர் கைது

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார்;, ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் முன்னுக்குப் பின் … Read more

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு – தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் `பொன்னியின் செல்வன்- பாகம் 1’

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா என பலரும் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, … Read more