அசோக் கெலாட் களத்தில் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி..!!

புதுடெல்லி, நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும் (வயது 71), முன்னாள் மத்திய மந்திரியும் மக்களவை எம்.பி.யுமான சசி தரூருக்கும் (66) இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற காங்கிரசின் புதிய கொள்கையின்படி அசோக் கெலாட் … Read more

'சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்வது முக்கியம்' – இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங் பேட்டி

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு வெறும் 106 ரன்னில் அடங்கியது. தென்ஆப்பிரிக்காவை சீர்குலைத்த இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். இந்த இலக்கை இந்திய அணி லேகேஷ் ராகுல் (51 ரன்), சூர்யகுமார் யாதவ் (50 … Read more

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்து!

மாஸ்கோ, உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் … Read more

ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற 'தேசிய பேரவையின்' முதலாவது கூட்டம்

தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களின் தலைமையில் நேற்று (29) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்திலேயே … Read more

பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்… புதிய சகாப்தம் தொடங்கியது என்பதை குறிக்கும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் ஏற்படும் மாற்றங்களின் புதிய உத்தியோகபூர்வ வெளிப்பாடு இது. பிரிட்டன் அரசராக ஆல்ஃபிரட் தி கிரேட் இருந்த காலத்தில் இருந்து, அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் நிறுவனம் … Read more

“இதுதான் அதிமுக-வின் திராவிட மாடல்!" – சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, முன்னாள்‌ பால்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமைத் தாங்கினார். இதில் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு வியக்கும் அளவுக்கு எழுச்சி மிகுந்த கண்டன பொதுக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் … Read more

கடலூர் இந்து முன்னணி ஆதரவாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கும் மிரட்டல் கடிதம்

கடலூர் / பொள்ளாச்சி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (52). இந்து முன்னணி ஆதரவாளரான இவர், ஸ்ரீராம அனுமான் தர்மபரிபாலன அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். பு.முட்லூர் – கடலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை வைத்துள்ளார். அதே பகுதியில் 100 அடி உயரஆஞ்சநேயர் சிலை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் … Read more

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் துப்ரி நகரிலிருந்து பஷானி என்ற இடத்துக்கு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர், நாட்டு படகு ஒன்றில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணம் செய்தனர். அந்தப் படகில் 10 மோட்டார் சைக்கிள்களும் ஏற்றிச் செல்லப்பட்டன. துப்ரி நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அடாபாரி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, படகு கடக்க முயன்றபோது, அதன் தூண் மீது படகு மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி … Read more

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: எப்போது நிறைவடையும் தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புக்குள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையின் … Read more