பெங்களூரில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் ஹெலிகாப்டர் சேவை

பெங்களூரில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஹெலிகாப்டர் பயண சேவை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் இருக்கும் … Read more

என் உடை என் இஷ்டம் : பூஜா காட்டம்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பூஜா வைத்தியநாத். பின்னர் சினிமாவிலும் பாட தொடங்கினார். தற்போது தமிழில் பல படங்களில் பாடி வருகிறார். பூஜா சமயங்களில் மாடர்ன் உடையில் போட்டோக்களை பதிவுடுகிறார். சிலர் இந்த ஆடை உங்களுக்கு செட்டாகவில்லை, அப்படி இப்படி என கருத்து பதிவிடுகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பூஜா, ‛‛சமீபகாலமாக நான் அணிந்திருக்கும் உடை பற்றில சிலர் விமர்சிக்கின்றனர். எனது வசதிக்கும், விருப்பத்தற்கும் ஏற்ப நான் ஆடை அணிகிறேன், உங்களை மகிழ்விக்க அல்ல. … Read more

ஊழியர்களுக்கு முதல் மரியாதை… – #மாத்தி யோசி கதைகள் – 3

இன்று திங்கட்கிழமைதானே…. காலையில் என் வண்டி ஆட்டோ-பைலட்டில் போட்டது போல் சந்துருவின் கடைக்குத் தானாகவே போகும். அவர் ஒரு வல்கனைஸிங் கடை வைத்திருந்தார். பழைய டயர்களுக்கு retread செய்து தருவார். பிரைடல் மேக்கப் போட்ட பெண் போல் ஜொலிக்கும். பிராண்டிற்கு ஒன்றிரண்டு என்று புதிய டயர்களும் இருக்கும். அந்த விற்பனையிலும் வருமானம் உண்டு. இரண்டு சக்கரங்களிலும் காற்றை நிரப்பிய பின் புதுத் தெம்போடு நிமிர்ந்து நிற்கும் என் வண்டி. பின்னர் என் வழக்கமான பணிக்காக பல இடங்களுக்கும் … Read more

மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு – மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால … Read more

அதிமுக, அமமுக இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் உச்சபட்ச பதவி!

திமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி அண்மையில் நடைபெற்ற 15 ஆவது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் அதிகாரபூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியாக, திமுகவில் உசசபட்ச பதவியாக கருதப்படும் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஏழு மாவட்டச் செயலாளர்கள் அந்தப் பதவியில் இருந்து … Read more

சுற்றுலா பயணியர் வருகையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்…!

டில்லி: சுற்றுலா பயணியர் வருகையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் முதலிடத்தையும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பெற்று உள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ‘இந்திய சுற்றுலா புள்ளி விபரம் – 2022’ என்ற 280 பக்க அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் , நடப்பாண்டில் (2022)  உள்நாட்டு சுற்றுலா … Read more

சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு

கடலூர்: சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையாக செப்.16 முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ஆக உயர்வு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

"திமுக ஆட்சியை நினைத்து திமுகவினரும் மக்களும் வருந்துகின்றனர்" – மதுரையில் இபிஎஸ் பேச்சு!

சற்று கவனக்குறைவாக இருந்ததால் அதிமுக அமைக்க வேண்டிய ஆட்சியை திமுக கைப்பற்றிவிட்டது என்றும், பொம்மை முதல்வராக தமிழக முதலவார் உள்ளார் என்றும் பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் … Read more

குஜராத்தில் திறப்பு விழாவிற்கு முன்பே சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த புதிய பாலம்!!

குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று, திறப்பதற்கு முன்பே இடிந்து சீட்டுக்கட்டுப்போல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டமான ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தநிலையில், நேற்று திடீரென இடிந்து சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி … Read more