செந்தில் கணேசன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசைப் பாடகர் ஆவார். இவை ஜூலை 15, 2018 அன்று விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் 6 வது போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை வென்றார், மேலும் இவருக்கு ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார். இவரது மனைவியும், கிராமிய மக்களிசைப் பாடகருமான ராஜலெட்சுமி ஆவார். இவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு வென்றார்.
தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற என பாடி வருகிறார்கள். தற்போது செந்தில் ராஜலட்சுமி சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்கிற பாடலை ராஜலக்ஷ்மி பாடி இருந்தார். இந்த பாடல் பட்டித் தொட்டி என அனைத்து இடங்களிலும் ஹிட் ஆனது. தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி புதிதாக கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் சமீபத்தில் தான் ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் தங்களுடைய பிள்ளைகளுக்கு காதணி விழாவை நடத்தி இருந்தனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அத்துடன் செந்தில் ராஜலக்ஷ்மியின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி அதை கண்ட ரசிகர்கள் பலர் இது வீடா அரண்மனையா என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.