தெரியல… புஹாஹாஹா… அந்த ஒற்றை ’குபீர்’ சிரிப்பால் அண்ணாமலைக்கு சீமான் பதிலடி!

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தெற்கு கலிபோரியாவில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், நம்ம அண்ணன்

இருக்கிறார். காலையில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வருவார். நாலு பத்திரிகையாளர்கள் மாட்டுவார்கள். சீமானை பார்த்தவுடன் மைக்கை நீட்டுவார்கள்.

அண்ணன் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்பார்கள். உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து வைத்திருப்பார். குரங்கு ஏன் குட்டிப் போட்டுச்சு? ஒரு கருத்து. குரங்கு ஏன் குட்டிப் போடல? அதுக்கு ஒரு கருத்து. ராஜராஜ சோழனா? அதுக்கு ஒரு கருத்து. காலையில் இருந்து இரவு வரை அரசியல் வாழ்க்கையில் எல்லாம் தெரிந்த மேதை போல எதற்கெடுத்தாலும் கருத்து.

எப்பவுமே ஒரு விஷயத்தை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு தெரியாது என்று சொல்லும் போது தான் அந்த அரசியல்வாதி நல்லவன் என நினைத்துக் கொள்ளுங்கள். இதனால் விவாதங்கள் அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை. எங்கோ அர்த்தமற்றதாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்குள் பாஜகவை இழுக்க பார்க்கிறார்கள். அப்படி செல்லக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.

ஏன் சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறீர்கள். டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் ஒன்றை கையிலெடுங்கள். அதைத் தான் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். இதையடுத்து தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அண்ணாமலை சென்னை திரும்பிவிட்டார்.

இந்த சூழலில் அண்ணாமலை பேசியது பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை உங்களை பார்த்து ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். செந்தமிழ் சீமான் அவர்களிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார். அவர் பெரிய ஞாநியா?

எந்தவொரு அரசியல் தலைவரும் தெரியல என்று சொன்னால் தான் பெரிய அரசியல் தலைவர் என்று கூறியிருக்கிறார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டனர். அதற்கு, “தெரியல” என்று பதில் கூறிவிட்டு ”புஹாஹாஹா…” என்ற வழக்கமான தனது குபீர் சிரிப்பால் அந்த இடத்தையே கலகலப்பாக்கி விட்டு புறப்பட்டுச் சென்றார். இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.