அரசு பஸ்- சுற்றுலா வேன் மீது மோதல்: 9 பேர் பலி| Dinamalar

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் காந்திநகர் கிராமம் அருகே நேற்று(அக்.,15) இரவு அரசு பஸ்சும், சுற்றுலா டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த சமயத்தில் வேன் பின்னால் வந்த டேங்கர் லாரியும் வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.