பிரித்தானிய மக்களுக்கு சிறந்த விடயங்களை செய்வார்! ரிஷி சுனக்கிற்கு இன்போசிஸ் நிறுவனர், மோடி வாழ்த்து


ரிஷி சுனாக்கினால் தங்கள் பெருமை கொள்வதாக என்.ஆர். நாராயண மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்

ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரித்தானியாவின் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு அவரது மாமனாரும், இன்போசிஸ் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

42 வயதில் பிரித்தானியாவின் பிரதமராக பதவி ஏற்கும் முதல் நபர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

அவருக்கு இன்போசிஸ் நிறுவனரும், மாமனாருமான என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Rishi Sunak

என்.ஆர். நாராயண மூர்த்தி வெளியிட்டுள்ள தனது பதிவில், ‘வாழ்த்துக்கள் ரிஷி. நாங்கள் அவரால் பெருமைப்படுகிறோம். அவர் வெற்றியடைய வாழ்த்துகிறோம். பிரித்தானிய மக்களுக்கு தன்னால் முடிந்த சிறப்பான விடயங்களை அவர் செய்வார் என நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.   

Narayana Murthy

India Today

Narendra Modi

(File photo/Reuters)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.