தாம்பரத்தில் பரபரப்பு.. பற்றியெரிந்த கார்.. பொதுமக்கள் சாலை மறியல்..!

சாலையோரம் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வாகனம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் எம்.இ.எஸ். சாலையோரம் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், வெகு நேரமாகியும் தீயணைப்பு வீரர்கள் வரவில்லை.

இதையடுத்து பொதுமக்களே ஒன்று சேர்ந்து வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதற்கிடையில், தீ விபத்து குறித்து தகவல் கொடுத்தும் தீயணைப்பு வீரர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த சேலையூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.