பயங்கரவாதிகளின் கொடூர திட்டம் முறியடிப்பு| Dinamalar

ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில், ரயில் நிலையம் அருகே, 18 ‘டெட்டனேட்டர்’கள் உள்ளிட்ட வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இது குறித்து, போலீஸ் எஸ்.பி., ஆரிப் ரிஷு கூறியதாவது:
ஜம்மு ரயில் நிலைய பகுதியில், டாக்சி நிறுத்தும் இடம் அருகே உள்ள வாய்க்காலில், கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில், ௧௮ டெட்டனேட்டர்கள், வயர்கள், மெழுகு உள்ளிட்ட வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருள்கள் இருந்தன. பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் அவர்களது திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.