நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த தகவலை, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், பள்ளி ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, பிரவீணா, ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் அதாவது, முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் முதல் சிங்கிள் வெளியிடப்படும் என்றும், அந்தப் பாடலை பொயட் தனுஷ் தான் எழுதியுள்ளதாகவும், காதல் பாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
First single of #vaathi soon … written by our poet @dhanushkraja … a love song … #sir #vaathi #venkyatluri @SitharaEnts
— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2022