சோமாலியா தலைநகரில் இரட்டை கார் குண்டுவெடிப்பு; 100 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சி செய்து வரும் நிலையில், தலைநகர் மொகாதிசுவில் (MOhadishu) அடுத்தடுத்து, இரண்டு கார் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்

இந்த நிலையில், சோமாலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஹசன் ஷேக் முகமது இந்தச் சம்பவத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். மேலும் சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் பயங்கரவாதக் குழுதான் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் மொகாடிஷுவில் 2017-ல் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகான மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் இது என்று சொல்லப்படுகிறது.

குண்டுவெடிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.