திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ


தனது திருமணத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் வந்து இறங்கிய டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 வினோத திருமண நிகழ்வு 

டிக் டாக்கில் பதிவிடப்பட்ட திருமணம் குறித்த வீடியோ ஒன்று 8.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ஆனால், இந்த வீடியோவிற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்துள்ளது.

இதற்கு காரணம் திருமண இடத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் அழைத்து வரப்பட்டது தான்.

குறித்த வீடியோவில், ஒரு பெரிய கார் வந்து கதவுகள் திறக்கப்படுகிறது. அதன் உள்ளே இருந்து சவப்பெட்டி ஒன்றை இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் தூக்கி வருகின்றனர்.

அவர்களில் இரண்டு பெண்கள் நீல நிற உடையணிந்து மணப்பெண்கள் போலவும், இரண்டு ஆண்கள் சாம்பல் நிற ஆடைகளை அணிந்து மணமகன்கள் போலவும் காட்சியளித்தனர்.

வைரலான வீடியோ 

அந்த சவப்பெட்டியானது திருமண உறுதிமொழி எடுக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிலிருந்து நபர் ஒருவர் வெண்ணிற ஆடையுடன் எழுகிறார். அவரைப் பார்க்கும் போது மணமகன் போல தெரிகிறார்.

ஆனால், மணமகள் எங்கும் காணப்படவில்லை.

திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ | Groom Arrives Coffin To Wedding Viral Video

@Tik Tok

மணமகனின் இந்த விசித்திர வருகை குறித்தும் விளக்கப்படவில்லை.

எனினும், இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருமண நிகழ்வை அவமரியாதை செய்யும் வகையில் இது அமைந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வு எங்கு நடந்தது என்பது குறித்து சரிவர தெரியவில்லை. ஆனாலும், பல தரப்பட்ட விமர்சனங்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.

திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ | Groom Arrives Coffin To Wedding Viral Video     

@Tik Tok



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.