நோயாளிக்கு மருத்துவமனையில் ஊசி போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! வெடித்த சர்ச்சை


இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நோயாளிக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஊசி செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவராக மாறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு ஆம்புலன்ஸ் ஒட்டுநர் ஊசி செலுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது.

இதற்காக, அவசர மருத்துவ அறைக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி, மருத்துவர் மற்றும் அங்கு நியமிக்கப்பட்டுள்ள பிற மருத்துவ பணியாளர்கள் என அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிக்கு மருத்துவமனையில் ஊசி போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! வெடித்த சர்ச்சை | Injection Given By Ambulance Driver Uttar Pradesh

இதற்கிடையில், குறித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் திவாகர் சிங் கூறுகையில்,

‘வீடியோவில் மாவட்ட மருத்துவமனையின் அவசர மருத்துவ அறையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒரு நோயாளிக்கு ஊசி போடுவதை க் காணலாம். புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.