டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது. இதில் மக்களவை இடங்களை 543-லிருந்து 850 ஆக அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முக்கிய சட்டத்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா- 2026 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]