அதிகாரத்தின் கைக்கூலியாக கவர்னர்கள் இருக்கக்கூடாது… தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பப்பெறும் முடிவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்! என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில், “தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை … Read more

Breaking News: ஏரியில் விழுந்த விமானம்; தண்ணீரில் மூழ்கிய பயணிகள்!

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டு இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து ( Plane Crash ) விபத்துக்கு உள்ளானது. இன்று அதிகாலை நடந்து விபத்துக்கு அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் … Read more

35 வருடங்களுக்கு பிறகு ‘நாயகன்’ கூட்டணி… மீண்டும் இணைகிறார்கள் மணிரத்னம் – கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. விக்ரம் கொடுத்த வெற்றியும், உத்வேகமும் கொடுத்த உற்சாசகத்தில் கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினார். அந்தவகையில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது. தற்போது இந்தியன் 2விலும், பிக்பாஸிலும் கமல் ஹாசன் பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து விக்ரம் 2 படம் ஆரம்பிக்கப்படுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து … Read more

16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு; ரயில் சேவை நிறுத்தம்

குன்னூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. குன்னூர்  பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக நூற்றாண்டு பழமையான மலை  ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நீராவி என்ஜினும், குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜினிலும் இயக்கப்படுகிறது.  இதில், பயணிக்க சுற்றுலா பயணிகள் நாடு முழுவதும் இருந்து வந்து ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா  பயணிகள் மலை ரயிலில் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் … Read more

தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி

தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிஆர்எஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 79,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஏக்நாத் தலைமையில் 2024ல் பேரவை தேர்தல்; துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம்!: பாஜக துணை முதல்வர் பட்னாவிஸ் தடாலடி

மும்பை: எங்களுக்கு துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உத்தவ் தாக்கரே … Read more

குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கிய சிறுமி.. காப்பாற்றச் சென்ற பெண்ணும் பலியான சோகம்

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளைநயினார் புரத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ் -சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சண்முகத்தாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரின் 16 ஆம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நயினார்புரத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த … Read more

” எங்கள் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள் “ – மகிழ்ச்சியில் ஆலியா – ரன்பீர் தம்பதி!!

பாலிவுட்டின் பிரபல ஜோடியான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இன்றுகாலை மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியாவுக்கு மதியம் 12.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.    “ எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்து இது. எங்களுடைய குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள்… அன்பு நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட பெற்றோராக மாறியிருக்கிறோம் “  என  ஆலியா பட் குழந்தையைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ஒரு அழகான … Read more