இந்த செயலிகளை டவுன்லோட் செய்யாதீங்க.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சமீப காலமாக ‘சைபர் கிரைம்’ குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது, ‘உங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். கடந்த மாத மின் கட்டணம் ‘அப்டேட்’ செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக அனுப்புவார்கள். பொதுமக்களிடம், அவர்கள் செல்போனில் … Read more

பிக் பாஸ் 6 நாள் 27: கமல் பஞ்சாயத்து: அசிமுக்கு கட்அவுட், தனத்துக்கு அறிவுரை – இதை எதிர்பார்க்கலையே!

ஒரு முரட்டுத்தனமான குதிரையை அடக்கும் மாஸ்டர் போல, அசிமையும் தனலக்ஷ்மியையும் சரியான பாதையில் திருப்பும் நல்லாசிரியனாக இந்த எபிசோடில் கமல் செயல்பட்டது சிறப்பு. குறிப்பாக அசிமைக் கையாண்ட விதம் மிகவும் நன்று. “என் பேச்சைக் கேட்டு இப்பத்தான் முதல்படில ஏறியிருக்கார். அதைப் பாராட்டலைன்னா கீழே இறங்கிடுவார். மாறுவதுதான் அவருக்கும் எனக்கும் பெருமை” என்று கமல் சொன்னது சிறந்த உளவியல் அணுகுமுறை. அசிமிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கணிசமான அளவில் மாற்றம் இல்லை. நாள் … Read more

சாலையில் சென்றவரை தாக்கி கடித்துக் குதறிய ஒற்றை கரடி..!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கியதால் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருத்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்டமணி சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை கிராமத்திற்கு மசாலா பொருட்கள் வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி அவரது இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை தாக்கி கடித்துக் குதறியுள்ளது. கிராம மக்கள் அவரை காப்பாற்ற வந்த நிலையில் நாகேந்திரன், சைலேந்திரன் என்ற இருவரையும் கடித்து விட்டு … Read more

மழை பாதிப்பு | தமிழகத்தில் 29 கால்நடைகள் இறப்பு; 67 வீடுகள் சேதம்: பேரிடர் மேலாண் துறை தகவல் 

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (நவ.5) பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 67 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மனித உயிரிழப்புகள் எதுவும் பதவாகவில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: நேற்றைய தினம் (நவ.5) தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 4.84 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 22.92 மி.மீ. பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில், 76 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு … Read more

வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: இமாச்சல பிரதேச பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

சிம்லா: காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும். பாஜக வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுந்தர்நகர், சலோனில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த 5 … Read more

பேருந்துக்குள் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா.. பரபரக்கும் அரசியல்

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூலை திருமாவளவன் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது, இந்து சமூகத்தின் நலனுக்காகவும், இந்து பெண்களின் நலனுக்காகவும் இந்த பிரதிகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இந்திய ஆரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் இந்துக்கள் மனுஸ்மிருதியின் கோட்பாட்டைத்தான் பின்பற்றி வருகின்றனர். பார்ப்பனர்கள் அல்லாதவர்களை சூத்திரரக்ள் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. மனுஸ்மிருதியை … Read more

ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு: டெல்லியில் நாளையில் தொடங்குகிறது!

இந்திய ராணுவத்திற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையிலான விஷயங்களை விவாதிக்கும் ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் இரு முறை நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டின் இரண்டாவது உச்சிமாநாடு டெல்லியில் வருகிறா 7ஆம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை முதல் 11ஆம் தேதி வரை இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அனைத்து ராணுவத் தலைமைத் தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த … Read more

சனம் ஷெட்டி ஆ இது.. ஆளே மாறி போயிட்டாங்க: போட்டோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானவர்தான் சனம் ஷெட்டி. இவர் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். மேலும் இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் புகழ் தர்ஷனை காதலித்தார், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், வாய்ப்புகள் … Read more

அண்ணாமலையின் அடடே மாற்றம்: நடந்தது என்ன?

தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அனைவருமே அண்மைக் காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் நிலைப்பாட்டில் தடாலடியிலிருந்து மென்மையான போக்குக்கு மாறி இருப்பதாகக் கூறுகிறார்கள்.   திமுக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடலூரில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், மரத்தின் மேல குரங்கு தாவுவது போல் சுத்திச் சுத்தி வருவது ஏன் என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். … Read more