உயர்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கினார். இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், திமுகவும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. … Read more

சிறுவன் கடித்து பாம்பு பலி| Dinamalar

ராய்ப்பூர் :சத்தீஸ்கரில், தன்னை கடித்த பாம்பை, 8 வயது சிறுவன் திரும்ப கடித்ததில், பாம்புஇறந்தது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும், 8 வயது சிறுவன் தீபக், தன் வீட்டுக்கு வெளியே சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த நல்ல பாம்பு, தீபக் மீது ஏறி, அவன் கையில் சுற்றியது. அலறிய சிறுவன், பாம்பை உதற முயன்றான். இதனால் கோபம் அடைந்த பாம்பு, சிறுவன் கையில் கடித்தது. கதறித் துடித்த தீபக், ஆத்திரத்தில் … Read more

முதல்வர் வேடத்தில் பிரியாமணி

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியாமணி. குறிப்பாக ஹிந்தியில் ஷாருக்கானின் ஜவான், அஜய் தேவ்கான் நடிக்கும் மைதான் போன்ற படங்கள் நடிக்கும் பிரியாமணி, நாகசைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் அவரது 22வது படத்தில் ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தலைவராகும் பிரியாமணி முதல்வர் ஆவது போன்றும், அதன்பின் அவர் என்னென்ன மாற்றங்கள் செய்கிறார் என்பது போன்றும் அவரது … Read more

புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு: 81 ஏரிகள் முழுமையாக நிரம்பின

திருவள்ளூர்/காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக புழல் உள்ளிட்ட சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கனமழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால், திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட … Read more

2 குழந்தைகள் உள்பட இலங்கை தமிழர்கள் 10 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 10 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், அங்குள்ள தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். இலங்கையிலிருந்து நேற்று காலை 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 தமிழர்கள், தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர். விசாரணையில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), இவரது மனைவி யோகேஸ்வரி(42), … Read more

டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட … Read more

வகுப்பறையில் சுருண்டு விழுந்த மாணவி இறப்பு| Dinamalar

பெங்களூரு :கர்நாடகாவில், தனியார் துவக்கப் பள்ளியில் 9 வயது மாணவி, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரில் உள்ள கங்கம்மாகுடி என்ற இடத்தில் தனியார் துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, நான்காம் வகுப்பு ஆசிரியர், வீட்டுப்பாடம் எழுதாத மாணவ – மாணவியருக்கு தண்டனை அளித்துள்ளார். அவர்களை வெளியே நிற்க வைத்து, வரிசையாக கன்னத்தில் அறைந்து உள்ளார். இதில், நிஷிதா என்ற 9 வயது மாணவி, … Read more

விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் குஷ்பு

தெலுங்கில் முதல்முறையாக வம்சி பைடி பள்ளி இயக்கி உள்ள வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்ட்ரியாகிறார் விஜய். வருகிற பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அதோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் குஷ்புவும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛இந்த படத்தில் நான் ஒரு சிறிய சிறப்பு வேடத்தில் … Read more

தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த பரந்தூர் விமான நிலையம் அமைவது கட்டாயம்: அரசு விளக்கம்

சென்னை: தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நடவடிக்கையாக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஈடுபட்டுள்ளன. இ்ந்நிலையில், விமான நிலையம் அமையும் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு விளக்கங்கள் அளித்தும், … Read more