செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: செய்யாறு அருகே நெல்வாய்  கிராமத்தில் கி.பி 9ம்  நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், கோமாரிக்கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிற்பங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் நெல்வாய் கிராமத்தில் வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து … Read more

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் திட்டமில்லை: உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் திட்டமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் அளித்துள்ளது. பிரதாப் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.  பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க வேண்டும் என ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் 7 தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: தெலங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் … Read more

தள்ளிப்போகும் தனுஷின் வாத்தி திரைப்படம்

தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இருமொழி படமாக உருவாகி உளு்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. … Read more

வெளியானது தேர்வு முடிவுகள்!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. newstm.in Source link

கேஜிஎஃப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு!!

ராகுல்காந்தி நடைப்பயணத்தின் போது யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎப் 2 திரைப்படத்தின் பாடல்கள், இசையை தனது வீடியோ ப்ரோமேஷன்களுக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார் என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது காப்புரிமை மீறல் புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. பெரும் தொகையை முதலீடு செய்து கேஜிஎப் 2 பாடல் காப்புரிமையை … Read more

சிறுவனை தரதரவென பள்ளிக்கு இழுத்துச் சென்ற தாய்!!

விழுப்புரத்தில் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று கதறிய சிறுவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியில் கொண்டு சேர்த்த தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், பள்ளிக்கு செல்ல மறுத்து சாலையிலேயே அடம்பிடித்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் சிறுவனின் கையை பிடித்து தரதரவென பள்ளிக்கு இழுத்து சென்றார். ஆனாலும் தாயின் கைபிடியில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவனை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தூக்கி சென்று பள்ளியில் கொண்டு … Read more

நித்தம் ஒரு வானம் விமர்சனம்: வித்தியாசமான திரைக்கதையுடன் ஒரு ஃபீல்குட் டிராவல் சினிமா!

“ஒரு டிராவல் போயிட்டு வா… லைப் மாறிடும்” என்ற சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஃபீல்குட் சினிமா இந்த `நித்தம் ஒரு வானம்’. கொல்கத்தா பயணமாகச் செல்லும் அசோக் செல்வனின் விமானம் கேன்சலாகிவிட, ஒடிசாவிலிருந்து பேருந்திலாவது சென்றுவிடலாம் எனப் பேருந்து நிலையம் வருகிறார். அங்கே தமிழ்ப் பெண்ணான ரிது வர்மாவைச் சந்திக்க, அவரிடம் தன்னுடைய கதையைப் பகிர்ந்து கொள்கிறார். தான் படித்த இரண்டு கதைகளின் நிஜமான கதை மாந்தர்களைத் தேடியே தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அவர் … Read more

கரகாட்டத்தில் ஆபாசம் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘கரகாட்டத்தில் ஆபாசன நடனம், இரட்டை அர்த்த பாடல்கள் இருக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேலப்பட்டி மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நவ.8-ல் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, கரகாட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பும் வழங்க … Read more

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை திட்டம் இல்லை: டாஸ்மாக் நிறுவனம்!

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் … Read more