நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட 'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், ‘திறந்திடு சிசே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து … Read more

வானிலை அறிக்கை: இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை, அலர்டா இருங்க மக்களே!!

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022 அன்று ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என ஆனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று, அதாவது, 05.11.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more

விவசாயிகள் நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய தமிழகஅரசு வலியுறுத்தல்!

சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது.  சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. … Read more

பெருவேலி ஊராட்சியில் மாணவர்கள் நாட்டுநல பணி திட்ட முகாம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருவேலி ஊராட்சியில் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த என்.எஸ்எஸ். மாணவர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் நாட்டு நலப்பணி செய்து வருகின்றனர். இதற்கு பெருவேலி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கங்காதரன் தலைமை தாங்கினார். இந்து மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் ஆசிரியர் மதிமோகன் முன்னிலை வகித்தார். 7 நாட்களுக்கு அந்த ஊராட்சியில் தங்கியிருந்து மாணவர்கள் அங்குள்ள நடுநிலை பள்ளி வளாகம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட வளாகம், தர்மராஜா கோயில் … Read more

ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்: அசோக் சிகாமணி

சென்னை: ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அசோக் சிகாமணி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம் என்று அசோக் சிகாமணி கூறியுள்ளார். ரஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம்: கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் மீது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் பாஜக மீது கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாக பாஜக பேரம் பேசியது என அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு குமரி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர் கதையாகயே உள்ளது. இந்நிலையில் குளச்சல் அருகே இன்று விடியற்காலம் பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் … Read more

ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

திமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க வேண்டும்; இல்லையெனில் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது என எல்.முருகன் கூறியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ”புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரு.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல்துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 ஆயிரம்பேருக்கு வேலை கொடுக்க முடிவுசெய்து … Read more

பிரதமர் மோடி தாக்கு விமர்சனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிம்லா: ஹிம்மாச்சல் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில், கடந்த 40 ஆண்டுகளாக மக்களை காங்., ஏமாற்றி வருகின்றது என்று பிரதமர் மோடி பேசினார். ஹிம்மாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அவர் பேசியவதாவது: கடந்த 40 ஆண்டுகளாக மக்களை காங்., ஏமாற்றி வருகின்றது. காங்., தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. மேலும் காங்., தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை … Read more

தனுஷின் வாத்தி படத்தில் பாடிய ஸ்வேதா மோகன்

தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'வாத்தி'. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தின் முதல் பாடலை தனுஷே எழுதியுள்ளார். மேலும் காதல் பாடலை ஸ்வேதா மோகன் பாடி உள்ளார் . இந்த … Read more