ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ந்தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 மாநில … Read more

இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே நான் சிறப்பாக விளையாட காரணம் – சூர்யகுமார் யாதவ்

துபாய், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது … Read more

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை பாதிப்பு; 1,444 பேருக்கு தொற்று உறுதி

ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் ஒன்டாரியோ மாகாணத்தில் 688 … Read more

ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எலான் மஸ்க் ட்வீட்..!

பிரபலமான சமூகவலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை … Read more

சாத்தூர் அருகே அம்பேத்கர் நகர் என பெயர் மாற்றத்திற்கு எதிராக கருப்புக்கொடி! – அதிகாரிகள் பதில் என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் பாண்டியன் நகர் உள்ளது. இந்தப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குழந்தைகளின் கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு அரசு ஆவணங்களிலும் பாண்டியன் நகர் என்ற முகவரியிலேயே அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர். பாண்டியன் நகர் இந்தநிலையில், மேட்டமலை ஊராட்சித் தலைவராக தற்போது … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் டெல்டா, உள் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். … Read more

முதல் வாக்காளரின் இறுதி ஊர்வலம் – நேரில் பங்கேற்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பங்கேற்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு புறபட்டுள்ளார். நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, … Read more

பருவமழையால் பலியான 26 பேர்: நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த பருவமழையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் … Read more

2 ரூபாய்க்கு மாட்டு சாணம் வாங்கப்படும் – காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்பதை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், … Read more