கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 30 சென்டி மீட்டர் மழைப்பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக குன்னூரில் 30 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி  சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டது.

குறிப்பாக, உதகை- குன்னூர் சாலையில் எல்லநள்ளி, டிடிகே சாலை, காந்திபுரம், அம்பிகாபுரம் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொக்லைன் இயந்திரம் கொண்டு, மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மண்சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம்  – உதகை இடையேயான  மலை ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.