வழக்கில் சிக்கிய வாலிபர் தற்கொலை: ஒருவர் கைது

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரியநாதன் மகன் ராஜா (22). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். அவரது நண்பர்கள், அதே ஊரை சேர்ந்த சங்கர் மகன் வினோத் (23) மற்றும் கிறிஸ்துராஜ் மகன் ஜெபஸ்டின் (19) ஆகியோர் கடந்த 21ம் தேதி இரவு மூர்த்திதரப்பினரிடம் வாக்குவாதம் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக கெடார் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினர்கள் மூர்த்தியை கைது செய்யக்கோரி நள்ளிரவில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சூரப்பட்டு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி  ஸ்ரீநாதா, உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. மூர்த்தியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.