டெல்லியில் இருந்த ரிஷப் பண்ட் பல்வேறு பணிகளுக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு அவர் ப்ரோமோஷன்ம் பணிகள் மற்றும் பயிற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பண்ட் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிஷாப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ரிஷப் பண்ட் -ஐ பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் சந்தித்தனர். அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கபூர் கூறினார். கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர், மருத்துவமனையில் பந்த், அவருடைய அம்மா மற்றும் உறவினர்களை சந்தித்தோம். பண்ட் நலமாக இருக்கிறார். அவரை மிகவும் சிரிக்க வைத்தோம்,” என்று கூறினார்.