மின் இணைப்பு ஆதார் இணைக்கும் பணிக்கு அவகாசம் நீட்டிப்பு..!!

. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்ட்டது.

தமிழகத்தில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று முன்தினம் வரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாச நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ம் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது. நாளை முதல் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.