Dhanush: 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்தார். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக வெளியானது. இந்துஜா, எல்லி அவ்ரம் உள்ளிட்ட இரண்டு கதாநாயகிகள் நடித்த இந்தப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கிய அருணுடன் முதன்முறையாக தனுஷ் இணைந்துள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக பீரியட் பிலிமாக இந்தப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது.

Sundar C, Aranmanai 4: ‘அரண்மனை 4’ படத்திற்கான வேலைகளில் இறங்கிய சுந்தர் சி: ஹீரோ இவரா..?

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷ் திடீரென கிளம்பியதாகவும், இதனால் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் படக்குழு ஒரு செட் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குற்றாலத்தில் நடக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் தனுஷின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RK Suresh: புதிதாக பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகர் ஆர்.கே. சுரேஷ் உருக்கம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.