அரியவகை கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி! ஒரு சேவல் ரூ. 2.5 லட்சம் வரை விற்பனை!

அழிவை நோக்கிச் செல்லும் அரிய வகையான கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்ற நிலையில், ஒரு சேவல் சுமார் இரண்டரை லட்சம் வரை விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சேவல் இனங்களில் அரிய வகையான கிளிமூக்கு விசிறிவால் சேவல் இனம் தற்போது மெல்ல அழிந்து வருகின்றது. இந்நிலையில் இந்த இனத்தை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல்லில் இன்று கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. அதில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என பல பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
image
இந்த கண்காட்சியில் 2அடி முதல் 3அடி நீளமும், 2 அடி உயரம் கொண்ட சேவல்கள், இரண்டு கிலோ முதல் 6 கிலோ எடை உள்ள சேவல்கள் என பங்கேற்றன. ஒவ்வொரு சேவல்களும், சேவல்களின் தரத்திற்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 2 லட்சத்து 50,000 வரை விற்பனை செய்யப்பட்டன. சேவல்கள் அல்லாமல், சேவல் குஞ்சுகளும் 7ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
image
மேலும் இந்த கண்காட்சியினை காண தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தனர். பங்கேற்ற சேவல்களின் எடை, உயரம், வாலின்நிளம், நன்றாக உள்ள கிளி மூக்கு, இறக்கை விரிப்பு போன்ற வற்றைக் கொண்டு சிறந்த சேவல்களை தேர்வு செய்து பரிசுகளும் வழங்கப்பட்டது. மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.