பிரித்தானியாவில் ஹொட்டல் முதலாளியை கரப்பான் பூச்சிகளை வைத்து பழிவாங்கிய சமையல்காரர்!


பிரித்தானியாவில் ஹொட்டல் முதலாளியை பழிவாங்க 20 கரப்பான் பூச்சிகளை சமையலறைக்குள் விட்ட ஊழியருக்கு 17 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹொட்டல்

Lincolnல் உள்ள ராயல் வில்லியம் IV ஹொட்டலில் (Royal William IV pub) Tom Williams (25) என்பவர் சமையல்காரராக வேலை செய்தார்.
கடந்தாண்டு அக்டோபர் 11-ல் விடுமுறை ஊதியம் தொடர்பாக ஹொட்டல் முதலாளியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் Tom தனது பணியை ராஜினாமா செய்தார்.

அதோடு முதலாளியை பழிவாங்கும் விதமாக, தான் வேலைசெய்த ஹொட்டலின் சமையலறையில் 20 கரப்பான் பூச்சிகளை விட்டார்.
இதை முதலாளி சிசிடிவி காட்சிகளை பார்த்து கண்டுபிடித்தார்.
அதைத் தொடர்ந்து சுகாதாரம், பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழியர்கள் உடனடியாக, சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்தனர்.

பிரித்தானியாவில் ஹொட்டல் முதலாளியை கரப்பான் பூச்சிகளை வைத்து பழிவாங்கிய சமையல்காரர்! | Chef Annoyed With Restaurant Releases Cockroach

indiatimes

கரப்பான் பூச்சிகள்

இதில் கரப்பான் பூச்சிகளை சுத்தம் செய்வதற்காக மட்டுமே சுமார் 22,000 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 22,25,410 லட்சம் செலவாகியிருக்கிறது.
இது குறித்து ஹொட்டல் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் நவம்பர் 21-ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு Tom ஆஜராகவேண்டும் எனக் கூறிய பிறகும், அவர் ஆஜராகவில்லை.

அதன்பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு 17 மாதங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 200 மணிநேரம் ஊதியம் பெறாத சமூகப் பணியை மேற்கொள்ளவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.