திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்; பெட்ரோல் லிட்டருக்கு 35 ரூபாய் உயர்வு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.

பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

அந்தவகையில் கடந்த 23ம் தேதி பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அது பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தார்.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

அரசின் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் வேகமாகத் தீர்ந்து வருவதால் இறக்குமதிச் செலவை கட்டுப்படுத்தவும், தற்போது இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை அடுத்து, 2022ல் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தின் கடுமையான விளைவுகளை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது.

உண்மையை கண்டு யாரும் எரிச்சல் கொள்ள வேண்டாம் ….!

அரசாங்கத்தால் விலை வரம்புகள் அகற்றப்பட்ட பின்னர் நாணயம் அதன் மதிப்பில் கிட்டத்தட்ட 12 சதவீதத்தை இழந்ததால், இந்த வாரம் பாகிஸ்தான் ரூபாய் வீழ்ச்சியடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு லாக்டவுன் அமல்… விநோத சுவாச பாதிப்பு- கலங்கும் வடகொரியா!

எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார். உலக சந்தையில் இருந்து எரிசக்தியை வாங்குவதற்கான அதிக செலவு காரணமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையிலும் இது போன்ற நிலை உருவான பிறகே அந்நாடு திவாலானது. அதேபோல் பாகிஸ்தானும் வெகுவிரைவில் திவாலாக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.