தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

தலைமைச் செயலாளர் இறையன்பு பணிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில்அடுத்த தலைமைச் செயலாளர் யார், இறையன்பு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் எழுந்துள்ளன.

ஸ்டாலின் எடுத்த முடிவு!2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க தயாரான சமயத்தில் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தாரோ அதைபோல முக்கிய பொறுப்புகளில் எந்தெந்த அதிகாரிகளை நியமிக்கலாம் என்பது குறித்து அதிக கவனமாக இருந்தார். தமிழ்நாடு அரசின் உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பதவியை ஸ்டாலின் யாருக்கு வழங்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வெ.இறையன்புக்கு வழங்கினார். ஸ்டாலினின் முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது.
கோட்டை வட்டாரத்தில் என்ன நடக்கிறது?கலைஞரின் செயலாளாராக பணியாற்றிய இறையன்புவின் பணி குறித்து ஸ்டாலின் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்தார். தனக்கு வழங்கப்பட்ட தலைமைச் செயலாளர் பணியை சிறப்பாக செய்து முதல்வர் ஸ்டாலின் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார் இறையன்பு. மே 31ஆம் தேதியுடன் இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் கோட்டை வட்டாரங்களில் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

‘இறையன்பு பணி நீட்டிப்பு செய்யப்படுவார் என எதிர்ர்பார்க்கப்பட்டது. முதல்வர் தரப்பும் அதற்கு தயாராக இருந்தது. ஆனால் இறையன்புவுக்கு இதில் உடன்பாடில்லையாம். எனவே வேறு பொறுப்புகளில் இறையன்புவை தக்கவைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இறையன்புக்கு புதிய பதவி தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பொறுப்பை இறையன்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றனர். சவாலான துறை, அத்துடன் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளான துறை. எனவே இதை சரி செய்யும் வேலையை ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு இறையன்புவும் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு தகவல் ஆணையர் பதவியை இறையன்புக்கு கொடுக்கலாமா என்ற பேச்சும் அடிபடுகிறது” என்கிறார்கள்.
அடுத்த தலைமைச் செயலாளர் யார்?இறையன்பு பணிக்காலம் முடிவடைந்த பின்னர் தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற பேச்சும் அதிகரித்துள்ளது. சீனியர்களில் யாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது? தலைமைச் செயலாளர் ரேஸில் யார் யார் பெயர் தற்போது அடிபடுகிறது என்பது குறித்து விசாரித்தோம்.
இறுதிப் பட்டியலில் இவர்கள் தான்! ​​
நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பதாக சொல்கிறார்கள். சிவதாஸ் மீனாவுக்கும், அதுல்யா மிஸ்ராவுக்கும இடயே கடும் போட்டி நிலவக்கூடும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.