ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டது ஏன்?… அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம்? என இரு தரப்பும் போட்டி போட்டு வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என இபிஎஸ்ம், ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ்ம் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு … Read more

உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கம்பாலாவில் உள்ள ஃபிரிடம் சிட்டி வணிக வளாகத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமானோர் திரண்டிருந்தனர். வான வேடிக்கைகள் நடைபெற்ற பின்னர், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், அலட்சியம் காரணமாக இந்த துயரம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source link

டிசம்பர் மாத ஜிஎஸ்டியாக ரூ.1,49,507 கோடி வருவாய் – மத்திய நிதி அமைச்சகம்

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி ரூபாய் பெறப்பட்டதாக மத்திய அரசின் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டை விட 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம், தெரிவித்துள்ளது. Source link

சீனாவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மரணம்: உடலைக் கொண்டுவர போராடும் குடும்பத்தினர்

சீனாவில் மருத்துவம் பயின்று வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், அவரது உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மாணவர் அப்துல் ஷேக் தனது மருத்துவக் கல்வியின் முடிவில் சீனாவில் … Read more

ஈஷா மையத்தில் மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவை: ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் 11ம் தேதி கோவையில் செயல்பட்டு வரும் பிரபல யோகா மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ திடிரென மாயமானதாகக் கூறப்பட்டது. மேலும் செம்மேடு பகுதியில் சுபஸ்ரீ வேகமாக ஓடும் காட்சிகளும் வெளியாகின. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 6 … Read more

மார்த்தாண்டம் மார்க்கெட்டிற்கு சென்றபோது மூதாட்டியை துரத்திச்சென்று கடித்து குதறிய தெருநாய்

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக தெரு  நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. காந்தி மைதானம், மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம் காய்கனி மற்றும் மீன் சந்தை, வடக்கு தெரு, ரயில்வே நிலையம் சாலை, குழித்துறை அரசு மருத்துவமனை வளாகம், குழித்துறை சந்திப்பு, கோர்ட் ரோடு  உட்பட முக்கிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.  அவை அந்த வழியாக பைக்கில் அல்லது நடந்து செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடித்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சாலைகளில் … Read more

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55-ஆக நிர்ணயம்

டெல்லி: முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

முதல்வர் அறிவிப்பு எதிரொலி; இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26ஆம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தற்போது அந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு விதமான ஊதியமும், 2009 மே மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு விதமான ஊதியம் வழங்கப்படுவதாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கினர். சென்னை டி.பி.ஐ நுங்கம்பாக்கம் வளாகத்தில் தொடங்கிய இடைநிலை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் 6 மாதங்களுக்கு மூடப்படுகிறதா? – தேவஸ்தானம் விளக்கம்

ஏழுமலையான் கோயில் ஆறு மாதங்களுக்கு மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் சுமார் ஆறு மாதக் காலம் நடைபெறும் என்று தேவஸ்தானம் கூறுகிறது. புதிய தங்கத் தகடுகள் பொருத்தப்படும் ஆறு மாத காலமும் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டு … Read more