வருகிறார் ஒரு வசனகர்த்தா: அற்புதம் காட்டும் அரவிந்தன்

கடந்த இருபதாண்டுகளில் அட கடவுளே, கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட 17 மேடை நாடகங்கள், காவியாஞ்சலி உள்ளிட்ட சீரியல்கள், வெள்ளக்காரத்துரை உள்ளிட்ட சினிமாக்களில் திரைக்கதை வசனங்களை எழுதி நாடக, சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க வசனகர்த்தாவாக திகழ்பவர் அரவிந்தன். தற்போது சந்தானம் நடிக்கும் படம் உள்ளிட்ட பல சினிமாக்களுக்கு கதை வசனம் எழுதி வருவதுடன், முக்கிய இயக்குனர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸின் சிறந்த கதாசிரியர், நாடக மாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றிருந்தாலும் கூட ஆர்ப்பாட்டம் இல்லாது … Read more

நெருக்கடியில் இருந்து மீள 2023 மிக முக்கியமான ஆண்டாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்ரமசிங்கே: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு 2023 மிகவும் ‘முக்கியமான ஆண்டாக’ இருக்கும் என்றும், தனது அரசாங்கம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நீண்ட காலமாக பிரச்சனைகளில் தத்தளிக்கும் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பற்றாக்குறையினால் 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியில் சிக்கியது. இதன் காரணமாக நாட்டில் அரசியல் … Read more

புத்தாண்டு பரிசாக பாம்புடன் விளையாட்டு.. விளையாட்டு விபரீதமாகி உயிர் போன பரிதாபம்..!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் மணிகண்டன் எனபவர் கலந்து கொண்டார். கொண்டாட்டங்களின் போது அருகில் கண்ணாடி விரியன் வகையை சார்ந்த பாம்பை கண்டவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் மணிகண்டன் அதை எடுத்து விளையாடியுள்ளார். அப்போது பாம்பு சட்டென்று அவரைக் கடித்துள்ளது.  இருந்தும் அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டு ஒவ்வொரிடமும் சென்று இதுதான் புத்தாண்டு பரிசு என அருகில் இருந்தவர்களிடம் காட்டினார். இதனையடுத்து அவர திடீரென … Read more

நடிப்பில் இருந்து விலகும் பிரபல வில்லன் நடிகர்!!

கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் தீனா. தமிழில் எந்திரன், மாநகரம், தெறி, மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர் என பல முன்னணி படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். திரை நடிப்பில் வில்லனாக அறியப்படும் இவர், நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்று ரசிகர்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சாதிய ஏற்றத்தாழ்வு கோட்பாடுகளுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வந்தார். படம், சமூக … Read more

“திமுக அரசு இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும், ரூ.22,000 கொடுத்திருக்கணும்" – செல்லூர் ராஜூ

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க மீனாட்சியம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022-ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது. அதிமுகவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விரைவில் … Read more

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் மாபெரும் மாநாடு: செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை: மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில், மாபெரும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “உலக மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வரவேண்டும் என, மக்கள் எதிர்நோக்குகின்றனர். திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள், அழிக்க … Read more

போதை மருந்து கடத்தல் மன்னன் ஊடுருவல்… நியூ இயரும் அதுவுமா தமிழ்நாட்டுக்கு ஷாக் நியூஸ்!

பல்வேறு பொது பிரச்னைகள் குறித்து அன்றாடம் ட்விட்டரில் பதிவிட்டு வரும் , புத்தாண்டும் அதுவுமாக இன்று வெளியி்ட்டு ட்விட்டர் பதிவில், “உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது. முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத் துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. … Read more

பாஜகவை குருவாக ஏற்கிறேன்; ராகுல் காந்தி கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் பதில்.!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி துவக்கிய பாரத் ஜோடோ யாத்திரையானது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘பாத யாத்திரையின் போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் மீது கூற வைத்து எந்த காரணமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்ய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்த முயற்சி செய்கிறது. புல்லட் புரூப் … Read more

புத்தாண்டு தினத்தன்று டெலிவரி பாயாக பணியாற்றிய Zomato CEO!

டிஜிட்டல் உலகில் கிட்டதட்ட எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் தான். பொருட்கள் மட்டுமல்லாது  சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகளை பயன்படுத்தி உணவுகளுக்கான ஆர்டர்காள் செய்யப்படுகின்றன. வீட்டிலிருந்த படியே, உணவுகளை பெற ஏராளமானோர் தினமும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். டெலிவரி பாயாக பணியாற்றிய Zomato CEO இந்நிலையில் Zomato இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று, உணவு டெலிவரி பாயாக பணியாற்றினார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை … Read more