Sivakarthikeyan: மாவீரன் பிரச்சனையால் படத்திலிருந்து விலகிய பிரபலம்..சிக்கலில் சிவகார்த்திகேயன்..!

டாக்டர் மற்றும் டான் என இரு மெகாஹிட் படங்களை கொடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் சிவகார்த்திகேயன். இடையில் சில தோல்விப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இவ்விரு படங்களும் நிலைநிறுத்தியது.

இதையடுத்து அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற நடிகர்..இத்தனை கோடியா ?

இந்நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக படப்பிடிப்பு நிருத்தப்பட்டதாகவும் தகவல் வந்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் இதனை படக்குழு மறுத்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி சிவகார்த்திகேயன் ஷூட் செய்த காட்சிகளை பார்த்துவிட்டு திருப்தியில்லை என கூறி மீண்டும் ரீஷூட் செய்ய சொல்லிவிட்டாராம். இது இயக்குனர் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உண்டான மோதலை மீண்டும் அதிகரித்தது.

இதன் காரணமாக தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் மாவீரன் படத்திற்கு பைனான்ஸ் செய்து வந்த கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ரீஷூட், இயக்குனர் மற்றும் நடிகரின் மோதல் காரணமாக அன்பு செழியன் விலகியுள்ளதாக தெரிகின்றது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்திற்கும் அன்பு செழியன் தான் பைனான்ஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.