டெல்லியில் நடந்த சந்திப்பு… அதிமுகவில் நடந்த திடீர் திருப்பங்கள்!,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ‘எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்’ என்று பதினைந்து நாள்களுக்கும் மேலாகக் கம்புசுற்றிய பா.ஜ.க., கடைசியில் ஓ. பன்னீர் செல்வத்தை டீலில் விட்டிருக்கிறது.
இப்படி பன்னீர் அணி பணிந்ததற்கும், சமாதானத் தூது வந்த பாஜக தலைவர் அண்ணாமலையிடமே கறார் காட்டும் அளவுக்கு எடப்பாடி கை ஓங்கியதற்கும் டெல்லியில் நடந்த அந்த சந்திப்பைத்தான் காரணம் காட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இது குறித்த விரிவான தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடனில் இடம்பெற்றுள்ளது.
அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க….
மேலும்,
மிஸ்டர் கழுகு: கெளரவமாக ஓரங்கட்டப்படுவார் அண்ணாமலை!
கழுகார் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
விகடன் நம்பிக்கை விருதுகள் விழா: நீங்களும் பங்கேற்க விருப்பமா?

தமிழ் மண்ணின் நம்பிக்கை மனிதர்களை ஒவ்வோராண்டும் அடையாளம் கண்டு, பிரமாண்டமான மேடைகளில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன்.
2021 மற்றும் 2022 என இரண்டு ஆண்டுகளுக்கான விழா காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இரு நேரங்களில் நடக்கிறது. மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் இந்த விழாவில் நீங்களும் பங்கேற்க விருப்பமா?
தூத்துக்குடி: விஷமாக மாறும் உப்பளங்கள்..!

தூத்துக்குடி – மதுரை சாலையில் கோமஸ்புரம், புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மீன் பதப்படுத்தும் ஆலைகள் இயங்கி வருகின்றன. மீன்களைக் கழுவுவதற்கும், பதப்படுத்துவதற்கும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு கோமஸ்புரம் உப்பாற்று ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த உப்பாற்று ஓடை செந்நிறமாக மாறி ஓடியது. இந்த கழிவுநீர் உப்பளங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
“இந்தியா உள்ளிட்ட நாடுகளை கண்காணிக்க சீன பலூன்கள்!”

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்த `மான்டனா’ மாகாணப் பகுதிக்கு மேலே மர்ம பலூன் ஒன்று பறந்தது.
‘அந்த மர்ம பலூன் சீனாவினுடையது. உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது’ என்று அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
இடையில் நின்றுபோன PPF… மீண்டும் தொடர முடியுமா..?

“நான் என் ஓய்வுக்காலத்துக்காக பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீடு செய்துவந்தேன்.
மூன்றாண்டுகள் முடிந்த நிலையில், அதைத் தொடர முடியவில்லை. முதலீட்டை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அந்த முதலீட்டைத் தொடர முடியுமா?”
இது குறித்து மட்டுமல்ல, மேலும் பல நிதி சார்ந்த சந்தேகங்களுக்கு
ஃபைனான்ஷியல் பிளானர் அனந்தராமன் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
மனப்பதற்றம் முதுகுவலிக்கு காரணமாகுமா?

Doctor Vikatan: ஆங்ஸைட்டி எனப்படும் மனப்பதற்றம் காரணமாக முதுகுவலி வர வாய்ப்பு உண்டா?
இந்த கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
மிஸ்டர் மியாவ்: ‘லியோ’ பட்ஜெட்… கண்டிஷன் போட்ட விஜய்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து எடிட் பணிகளை முடித்திருக்கிறார்கள். முதல் பாகம் சூரியை மையமாக வைத்து நகர, இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி நர்த்தனம் ஆடியிருக்கிறாராம்.
‘இரண்டாம் பாதி முழுக்கவே தீவிர அரசியலைப் பேசியிருக்கிறார் வெற்றிமாறன்’ என்கிறார்கள் படக்குழுவினர். பட்ஜெட் எகிறியதால் பயந்துகொண்டே இருந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார், படத்துக்கான பிசினஸும் மிகுதியாகியிருப்பதால் இப்போது செம ஹேப்பியாம்.
மிஸ்டர் மியாவில் மேலும்…
ஆர்யாவுக்கு ஜோடி போட தயங்கும் நடிகை!
‘லியோ’ பட்ஜெட்… கண்டிஷன் போட்ட விஜய்!
லைகாவுக்கு மறுப்பு தெரிவிக்காத அஜித்!
ஸ்லிம் அம்மணியின் ரகசியம்!