மீண்டும் ஆக்ஷன் படத்தில் விஜய்சேதுபதி

டாப் ஹீரோக்களுக்கு வில்லன், குணசித்ரம், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் பக்கா ஆக்ஷன் படத்திற்கு வருகிறார். இந்த படத்தை விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் … Read more

அதிர்ச்சி! 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!!

150 அடி ஆழ பள்ளத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர். உணவு பொருட்களை ஏற்றி கொண்டு கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வாழைகிரி அருகே வளைவில் திரும்பும் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதி 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்த போல எழுந்த பலத்தை … Read more

தன்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட பெண்ணை தேடிக் கொன்ற இளம்பெண்! – `பகீர்' சம்பவத்தின் பின்னணி என்ன?

ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், … Read more

மத்திய பட்ஜெட் 2023-24 | தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள … Read more

குடிபோதையால் கார் விபத்து நேர்ந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் நிவாரணம் தரவேண்டும்: கேரள ஐகோர்ட்

திருவனந்தபுரம்: ‘விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு காப்பீட்டு நிறுவனங்களை சாரும். வாகனத்தை ஓட்டியவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இழப்பீடு வழங்குவதில் கொள்கை சார்ந்த முடிவுகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கியாக வேண்டும்’ என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு முதலில் இழப்பீடு வழங்க வேண்டும். பின்னர், அதனை அந்த விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி அல்லது … Read more

'கலைஞரின் பேனா சிலையை உடைப்பாரா'..? சீமானுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

மெரினாவில் கலைஞருக்கு பேனா சிலை அமைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என்று சீமான் கூறியதற்கு பேனா சின்னத்தை ஆதரிப்பவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, சீமான் சிலையை உடைத்தால் எங்கள் கைகள் பூப்பறித்து கொண்டிருக்குமா? எங்களுக்கும் கை இருக்கு” என்றும் இந்த ஒரு பதிலே அவருக்கு போதுமானது என்றும் அமைச்சர் கூறினார். ஆனால், சுற்றுசூழல் குறித்து சீமான் … Read more

வேளாண் ஸ்டார்ட்அப்களுக்கு தனி நிதி அமைப்பு; நிதி அமைச்சர் அறிவிப்பு.!

ஒன்றிய அரசின் 2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அந்தவகையில் பாதுகாப்புத்துறைக்கு கடந்த ஆண்டைவிட 13% கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத்துறைக்கு ரூ. 5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனச் செலவும் ரூ.10,000 கோடி அதிகரித்து ₹ 1.62 லட்சம் கோடியை எட்டியுள்ளது. … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 100 பேர் பலி; காவல்துறையை குறிவைத்து தாக்குதல்.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது, சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே … Read more

Suriya 42: 'சூர்யா 42' படம் குறித்து தீயாய் பரவிய வதந்தி: படக்குழு அதிரடி விளக்கம்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘சூர்யா 42’ . வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. மேலும், ‘சூர்யா 42’ படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 42’ படம் 3டியில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ … Read more

மாமல்லபுரத்தை கண்டு ரசித்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்!

முதன்முறையாக இந்தியா ஜி-20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து, ஜி 20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி 20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் … Read more