திருத்தணி முருகன் கோவிலில் கேஸ் கசிவு..!!

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்நிலையில், திருத்தணி முருகன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் திடீரென்று சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பதறிய கோவில் ஊழியர்கள் பிரசாத கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் … Read more

“இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை"- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட்  நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் … Read more

தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் … Read more

இந்தியா 2047க்குள் வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்ப பயன்பாடு உதவும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடைய தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் இன்று(பிப். 28) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”சிறிய தொழில்களை மேற்கொள்வதில் இருக்கும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க அரசு விரும்புகிறது. என்னென்ன செலவுகளை குறைக்க முடியும் என்பது தொடர்பான பட்டியலை அளிக்குமாறு தொழில்துறையை நாங்கள் கேட்டிருக்கிறோம். அனைத்து வகையான சிறு தொழில்களிலும் இருக்கும் தேவையற்ற … Read more

மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள்; திமுக சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து கலைஞர் கருணாநிதி , தந்தை பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தவுள்ளார். ஸ்டாலின் பிறந்த நாள் பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மூத்த … Read more

Leo: இனிமே அது நடக்கவே நடக்காது… தனி டீம் அமைத்த லியோ படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் பேன் இந்தியா படமாக உருவாகிறது. இதன் காரணமாக அனைத்து மொழி பிரபலங்களையும் படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். Tiktok Elakkiya: நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டாங்க… கதறி அழுத டிக்டாக் இலக்கியா! லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் கடந்த … Read more

உயிரிழந்த கருணகரன் ராசசுந்தரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் ஏதிலிகள் சமூகம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மெல்போர்னின் ஏதிலிகள் சமூகம், (community of South East Melbourne) இலங்கையின் தமிழ் ஏதிலியான கருணகரன் ராசசுந்தரனின் துன்பகரமான மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினரை ஆதரித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் நிகழ்ந்த ராசசுந்தரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆதரவளிக்கக் குறித்த ஏதிலிகள் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஏதிலிகள்  நிதியத்துக்கு 10 நாட்களில் சுமார் 6, 000 டொலர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. முதன்முறை அல்ல… கருணகரன் ராசசுந்தரன் … Read more

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அம்புலுவாவ கோபுரம்.. வெளிநாட்டு சுற்றுலா பயணி எடுத்த செல்பி வீடியோ வைரல்!

இலங்கையின் அம்புலுவாவ பகுதியில் உள்ள 48 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், குறுகிய இடைவெளி கொண்டதாகவும் இருக்கும் அந்த கோபுரத்தில் உயிரை பணயம் வைத்து அவர் ஏறியுள்ளார். இக்காட்சியை செல்பி வீடியோ மூலம் அவர் பதிவிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.

மர்மமான முறையில் மாயமான இளைஞர்: மீனவர் ஒருவர் பிடித்த சுறா வயிற்றில் கண்ட அதிரவைத்த காட்சி…

அர்ஜெண்டினாவில், மர்மமான முறையில் மாயமான ஒருவரின் உடல் பாகங்கள், சுறா ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற கணவன் மாயம் Virginia Brugger என்னும் பெண், இம்மாதம் 18ஆம் திகதி, கடற்கரைக்குச் சென்ற தன் கணவரான Diego Alejandro Barria (35)ஐக் காணாததால் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார். பொலிசார் Diegoவின் நான்கு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஒன்றில் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்துள்ளனர். எட்டு நாட்களாகியும் கணவனைக் காணாமல் Virginia கவலையடைந்திருந்த நேரத்தில் … Read more

டி20 போட்டியில் 10 ரன்களுக்கு ஆலவுட் குறைந்த ரன்கள் எடுத்து சாதனை படைத்த அணி…

டி20 போட்டியில் 8.4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆலவுட் ஆன ஐஸல் ஆப் மேன் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய ஐஸல் ஆப் மேன் அணி முதலில் விளையாடி 8.4 ஓவரில் ஆலவுட் ஆனது. இதனையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்பெயின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குறைந்த ரன் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக ஸ்பெயின் … Read more