ஆந்திராவில் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் நாசம்

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே இயங்கி வரும் மின்னணு உபகரண தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. பாக்ஸ்லிங்க் என்னும் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் … Read more

இத்தாலி நோக்கி பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலி! மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

துருக்கி நாட்டில் இருந்து படகில் இத்தாலிக்கு பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலியாகினர். படகில் பயணித்த புலம்பெயர்ந்தோர் நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் துருக்கியில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் பயணித்தனர். இத்தாலி நோக்கி சென்ற அவர்கள் சென்ற படகு, குரோடோன் நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக விபத்தில் சிக்கியது. @IMAGO/ZUMA Wire 61 … Read more

44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறாா். மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்களுக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணைகளையும் அவா் வழங்குகிறாா் என்று கூறினார்.

விசைப்படகு மீது ஹாங்காங் கப்பல் மோதல் 9 பேர் காயம்

நாகர்கோவில்: தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த அந்தோணிதாசனின் ரூபி என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று (27ம் தேதி) சீனாவின் ஜான்ஜியங் துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் கோர் அல் ஃபக்கான் துறைமுகத்துக்கு சென்ற ஹாங்காங் கப்பல் தமிழக கேரள மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மீது மோதியது. இதில் படகு கடுமையாக … Read more

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்

சென்னை : மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் ஆகும். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு-ஓசூர் மெட்ரோ சேவைக்கு பச்சைகொடி: திட்ட ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு பொம்மசந்திரா-ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டமான ஆர்.வி.சாலை-பொம்மசந்திரா (மஞ்சள் வழித்தடம்) ரயில் பாதை அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பொம்மசந்திரா வரையில் உள்ள ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்தாண்டு கர்நாடக மாநில … Read more

பள்ளிக்கு செல்வதை தடுக்க மாணவியருக்கு விஷம்| Poisoning to schoolgirls to stop them from going to school

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹ்ரான்- பள்ளிக்குச் செல்வதை தடுக்க மாணவியருக்கு விஷம் வைத்த சம்பவம் ஈரானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் இஸ்லாமிய பழமைவாதிகள், பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை பிறப்பித்து வருகின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான, ‘ஹிஜாப்’ அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைக்கண்டித்து போராட்டம் நடத்திய மாஷா அமினி என்ற இளம்பெண் சில … Read more

ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம்: மார்ச் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் விழா

ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம்: மார்ச் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் விழா Source link

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு .. தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு.!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்ரவரி 28ஆம் தேதி) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஹால் டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு குறித்த விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் … Read more