Premium laptops: 1 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கும் பிரீமியம் லேப்டாப் பட்டியல்!

லேப்டாப் எனது தற்போது முக்கியமான எலக்ட்ரானிக் கருவிகளில் ஒன்றாக உள்ளது. அலுவலகம் முதல் வீட்டில் விளையாடும் கேம் வரை அனைத்திற்கும் லேப்டாப் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. Apple நிறுவனத்தின் macbook Air முதல் பிரீமியம் Windows லேப்டாப் கருவிகள் வரை நாம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலையில் வாங்கமுடியும்.

இந்த பட்டியலில் அதிக திறன் உள்ள 32GB RAM, 13வது ஜெனரேஷன் Intel Processor போன்றவை இல்லை. இவை சமீபத்திய ஜெனெரஷன் லேப்டாப் பலவற்றில் இடம்பெறும் வசதிகள். அதற்காக இதன் முந்தய ஜெனெரஷன் கருவிகள் மோசம் என்று ஆகிவிடாது. எலக்ட்ரானிக் நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ப புதியவற்றை சேர்த்துக்கொண்டே இருக்கும்.
Apple MacBook Air M1- 84,990 ஆயிரம் ரூபாய் இந்த லேப்டாப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இப்போதும் இது பிரீமியம் லேப்டாப் ஆகும். இதில் 13.3 இன்ச் டிஸ்பிளே வசதி, 6 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, M1 SOC சிப் போன்றவை இருப்பதால் சிறந்த திறன் நமக்கு கிடைக்கும்.
உங்களிடம் ஏற்கனவே ஐபோன் , ஐபேட், ஏர் போட் போன்ற ios பொருட்கள் இருந்தால் நிச்சயம் இது உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும். Excel அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இது உங்களுக்கு செட் ஆகாது. Windows 11 லேப்டாப் ஏதாவது ஒன்றை பாருங்கள்.
LG Gram 16 – 84,990 ஆயிரம் ரூபாய் பெரிய ஸ்க்ரீன் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த LG Laptop வாங்கலாம். இந்த லேப்டாப் மூலமாக Microsoft excel மற்றும் வீடியோ எடிட்டிங் செய்யலாம். இதில் 16 இன்ச் ஸ்க்ரீன், Intel Core i7 – 1260P, 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
HP Victus – 97,999 ஆயிரம் ரூபாய் சிறந்த கேமிங் அனுபவம் தரும் ஒரு லேப்டாப் மாடலாக இந்த HP Victus லேப்டாப் சீரிஸ் இருக்கிறது. இதில் 16.1 இன்ச் டிஸ்பிளே வசதி, 144HZ refresh rate, முழு HD Resolution மற்றும் ஒரு மாதத்திற்கான Xbox Game Pass PC Subscription கிடைக்கும். இதில் AMD Ryzen 7 (6800H) மற்றும் Nvidia Geforce RTX 3050 Ti GPU, 4K Webcam அல்லது 720P Webcam வசதி இடம்பெற்றுள்ளது.
​Asus Zenbook 14 OLED -99,990சிறப்பான திரை அனுபவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதைவிட வேறு எந்த ஒரு லேப்டாப் ஆப்ஷனும் இல்லை. இந்த 14 இன்ச் OLED ஸ்க்ரீன் கொண்டுள்ள லேப்டாப் 90HZ refresh rate, 2.8K Resolution, டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே, சிறிய கேமிங் விளையாடவும், எடிட்டிங் செய்யவும் நமக்கு பயன்படும்.
இந்த லேப்டாப் Octa Core AMD Ryzen 7 (70730U) CPU வசதி, 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி, AMD Graphics வசதி கொண்டுள்ளது. இதில் நமக்கு போர்ட் வசதிகளும் இருப்பதால் நாம் நமது ஸ்மார்ட்போன்களை இதில் இணைக்கலாம்.
​Samsung Galaxy Book 2 360 – 1.05 லட்சம் ரூபாய் புதிதாக சாம்சங் நிறுவனம் Galaxy Book 3 சீரிஸ் லேப்டாப் அறிமுகம் செய்துள்ளதால் இதன் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் லேப்டாப் வேண்டும் என்றால் இந்த 360 டிகிரி மடங்கும் திரை மற்றும் கீபோர்டு உள்ள இந்த லேப்டாப் ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
இந்த லேப்டாப் 13.3 இன்ச் முழு HD AMOLED டிஸ்பிளே வசதி, 360 டிகிரி மடங்கும் திரை இருப்பதால் Tablet போன்ற அனுபவம், Intel Core i7 1255U (Evo), 16GB RAM, 512GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.